01-08-2006, 02:48 AM
<b>புலிகளோ பொறுப்பு என்று கூறிவிட
முடியாது என்கிறார் ஹொக்லன்ட்
போர்நிறுத்த மீறல் அல்ல என்றும் கருத்து </b>
திருமலைக் கடலில் நடந்த சம்பவம் தொடர்பாக கடற்படையினர் புலிகள் மீது சந்தேகம் கொண்டிருப்பினும் புலிகள்தான் அதற்குப் பொறுப்பு என்று எங்களால் கூறி விடமுடியாது. இதனை யார் செய்தார்கள் என்று சொல்வது மிகவும் கடினமானது.
இவ்வாறு தெரிவித்தார் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரப் ஹொக்லன்ட்.
திருமலைக் கடலில் கடற்படைப் படகு மூழ்கடிக்கப்பட்டது தொடர்பாக அவர் பி.பி. ஸிக்கு கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது@
இதனை யார் செய்தார்கள் என்று கூறுவது மிகவும் கடினம். இப்போதைக்கு எந்தச் சாத்தியப்பாட்டையும் நாங்கள் கூறிவிட முடியாது. என்ன நடந்தது என்பதை முதலில் நாங்கள் பரிசீலிக்கவேண்டும். வழமைபோல நாங்கள் விசாரணைகளை நடத்தவேண்டும். இத்தாக்குதலின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருந்திருக்கக் கூடும் என்று கடற் படையினர் தரப்பில் சந்தேகம் வெளியிடப் பட்டிருக்கின்றது. அவர்கள் (கடற்படையி னர்) எங்களிடம் முறையிடுகிறார்கள் என் றால் சம்பவத்தின் பின்னணியில் புலிகள் உள்ளனர் என்று அவர்கள் சந்தேகிக்கின்ற னர் என்பது தெளிவு. ஆனால், புலிகள்தான் இதைச் செய்தார்கள் என்று எங்களால் சொல்ல முடியாது. இந்த விடயத்தைப் போர்நிறுத்த மீறல் என்று நான் அறிவிக்கப்போவதில்லை. ஏற்கனவே இருதரப்புகளிடையேயும் நிலவு கின்ற பிரச்சினைகளில் இதுவும் இன்னொன்று என்றுதான் நினைக்கமுடியும். நிலைமை மிகவும் மோசமடைந்து செல்கின்றது.
என்ன நடந்துள்ளது என்று கண்டறிவதில் நாங்கள் கடற்படையினரின் உதவியைச் சார்ந்திருக்கின்றோம். ஏன் என்றால் நாங்கள் புலிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது இச்சம்பவம் தொடர்பாகத் தமக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டனர்.
நாம் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. என்றாலும் கண்காணிப்புக் குழுசார்பில் புலி களிடம் தொடர்பு கொள்ளப்பட்டது. சம்ப வம் பற்றித் தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் தாம் தெரிந்துகொண்டதாக அவர்கள் கூறுகின்றார்கள். புலிகள் தமக்கும் இத்தாக்கு தலுக்கும் தொடர்பு இல்லை என மறுத்துவிட் டார்கள்.
யார் இந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்று கண்டறிவது கஷ்டம் என்று நான் நினைக்கின்றேன்.
கடலுக்குள் மூழ்கி படகுகளின் சேதத் தைப் பார்ப்பதற்கு எங்களிடம் ஆள்கிடை யாது. சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு எங் களிடம் தனியாகப் படகு கிடையாது.
அதற்கெல்லாம் நாங்கள் கடற்படையைத் தான் நம்பியிருக்கின்றோம். ஆனால், மூழ் கிய படகுகளின் சேதங்களை கடற்படையின ரால் வெளியில் கொண்டுவர முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் கண் காணிப்புக் குழுவின் தலைவர்.
http://www.uthayan.com/pages/news/today/03.htm

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>