12-31-2003, 07:37 PM
எது என்னவோ முதியவர்களிற்கு முதியோர் இல்லமே சிறந்தது என நான் கூறுவேன். அல்லது அவர்கள் தனித்திருப்பது எவ்வளவோ மேல். நான் கண் கூடாக கண்ட எனது அனுபவத்தை சொல்ல நினைக்கிறேன். இவை எனக்கான தனிப்பட்ட கருத்து இவை எனக்கே எனக்கான சிந்தனையின் தோற்றுவாய்.
அம்மா அப்பாவை பராமரிக்குறோம் என கூறி அவர்களிடத்தில் அதிக வேலைப்பழுக்களை சுமத்துகிற பிள்ளைகளைத்தான் நான் கண்டிருக்கிறேன். கேட்டிருக்கிறேன். பாவம் முதியவயதிலும் பேரப்பிள்ளைகளை பராமரிப்பதும் சமைப்பதும் என அவர்களிற்கு ஓய்வும் இல்லாமல் மன நிம்மதியும் இல்லாமல் இறந்தே போகிறார்கள். இது ஒரு கருத்து.
எனது தாய் தந்தையரை எடுத்தால் தாம் தனித்த வாழுவோம் எனக் கூறி சில சமூக சேவைகளை டென் மாக் அரசிற்கு செய்து கொண்டு சந்தோசமாக பொழுதை நகர்த்தகிறார்கள். நான் ஒரு நாள் தொலைபேசி எடுக்காது போனால் அல்லது வெளியில் போகிறோம் என கூறாது வெளியில் நண்பர் நண்பிகள் வீட்டிற்குப் போய் வர லேற் ஆனால் தொலைபேசி பலதடவை எடுத்ததாக காட்டும். நாம் வர சாமம் பன்னிரண்டு மணியானால் நிச்சயமாக சாமம் ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கு தொலைபேசி எடுத்து குழந்தைப்பிள்ளை மாதிரி அடம்பிடிப்பார் பேரப்பிள்ளைகளோடு கதைத்துத்தான் வைப்பேன் என (எனது தந்தை.) வந்து எம்மோடே இருந்து விடுங்கள் என கேட்டால் அதற்கு பதில் விசர் கதை கதைக்காதே மகள:; அல்லது சும்மா இரு பிள்ளை என சிரிப்பார்.
இப்படி மாறுபட்ட சிந்தனை வழிகளாய் முதியவர்கள் இருக்கும் போது நாம் என்ன செய்து விட முடியும்?
எனது நண்பி ஒரு முறை கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.
நாம் முதியவராகும் போது ஊர் போயிட வேண்டும். காரணம் ஊரிலை எண்டால் பக்கத்து வீட்டு சின்னப்பு வோடையாவது வெத்திலை பாக்கு போட்டபடி பேசலாம். கதைச்சு சிரிக்கலாம் அனா இங்கை தப்பா எல்லோ பாக்கினம். பிறகு சாகிற காலத்திலை இதுகளுக்கு பயந்து தனிச்சு வாழ்ந்து சாக வேணும். என்றார். நாம் எல்லோரும் அன்று நினைத்து நினைத்து சிரித்தோம். இன்று இந்த கருத்துக்களை பாற்ததும் அவர் நகைச்சுவையாக கூறியதன் அற்தம் தாற்பரியம் புரிகிறது.
முதியவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருப்பார்கள். சிலர் தனித்து வாழ்வதே நல்லம் என நினைப்பர் சிலர் பேரக் குழந்தைகளோடு பிள்ளைகளோடு வாழ்தல் பிடிக்கும் என நினைப்பர்.
இப்படியாக இருக்கிறபோது தனித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் சில அசம்பாவிதங்களை வைத்து ஒட்டு மொத்த சமூகத்தை எடைபோட்டு இக் கட்டுரை வரைந்த உதயன் சற்று சிந்திக்க வேண்டும். தனித்து புலம்பெயர் மக்களை அன்னியப்படுத்தி கட்டுரை எழுதுதலை இனிமேல் ஈழம் வாழ் தமிழர்( எழுத்துலம்) தவிற்பது சிறந்தது. இல்லையேல் எமக்குள்ளான உறவு இடைவெளிஅதிகரித்து விடலாம். இத்தகைய இடைவெளி ஆபத்தானது.
வேண்டுமானால் முதியவர்களிடத்தில் இருந்து உண்மையான ஆய்வு ஒன்றை தாராளமாக மேற்கொண்டு அதன் அடிப்படையில் கட்டுரையை முன்வைத்திருக்கலாம் சும்மா போவடி போக்காக எழுதுதல் நன்மை தராது.( அங்குள்ள முதியவர்கள்
ஐயோ காசும் வராதே என நினைத்து பொய்யும் கூறலாம் ஐhக்கிரதை உதயன் )
முதியவர்கள் அனேகரின் மன இயல்பு அப்பப்போ தாம் நினைக்கிறபோது கொஞ்சிக் குலாவவே பேரப்பிள்ளைகளும் பிள்ளைகளும் முதியவயதில் அவர்களுக்கு அதிக அமைதியும் தனிமையும் தேவைப்படுவதே உண்மை.
இதனால் அவர்கள் யாரின் தொல்லைகளும் இன்றி தனித்து வாழவே தலைப்படுகிறார்கள்.

[b]Nalayiny Thamaraichselvan