01-07-2006, 03:55 PM
சனி 07-01-2006 19:55 மணி தமிழீழம் [நிருபர் நகுலன்]
பைபர் கண்ணாடி இழைப் படகே மோதி வெடித்தது உயிர் தப்பிய இரு கடற்படையினரும் தெரிவிப்பு.
இன்று அதிகாலை தாக்குதலுக்கு உள்ளான கடற்படையினரின் படகில் இருந்து காணாமல்போன 13 கடற்படை வீரர்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு கடற்படையினரின் தகவல்படி பைபர் கண்ணாடி இழையிலான படகே தமது படகை மோதி வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையினரின் தகவல்படி மூதூர் இலகந்தை என்ற இடத்தில் இருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளே தாக்குதலை மேற்கொண்டதாக சிறீலங்கா கடற்பiயினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை திருகோணமலை கடற்பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினரின் டோரா படகு மீது நடத்தப்பட்ட தாக்குதல் தற்கொலைத் தாக்குதல் என்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மீனவ படகுகளின் மத்தியிலிருந்து படகொன்று டோரா படகு மீது மோதி தாக்கியுள்ளதாக கடற்படைத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் காணாமல் போன கடற்படை வீரர்களில் இருவர் இன்று முற்பகல் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் காணாமல் போயுள்ள மேலும் 13 கடற்படை வீரர்களை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அவர் கூறினார்.
Pathivu

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>