01-07-2006, 12:14 PM
நர்மதா Wrote:திருகோணமலை கடற்பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினரின் டோரா படகு மீது நடத்தப்பட்ட தாக்குதல் <b>தற்கொலைத் தாக்குதல் என்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது</b>.
மீனவ படகுகளின் மத்தியிலிருந்து படகொன்று டோரா படகு மீது மோதி தாக்கியுள்ளதாக கடற்படைத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் காணாமல் போன கடற்படை வீரர்களில் இருவர் இன்று முற்பகல் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் காணாமல் போயுள்ள மேலும் 13 கடற்படை வீரர்களை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அவர் கூறினார். இதனை முன்னிட்டு கடற்படைக்குச் சொந்தமான சில இயந்திரப் படகுகள் திருகோணமலை கடலில் தேடுதல் நடவடிக்கையில் ~டுபட்டுள்ளன. திருகோணமலை துறைமுகத்தை அண்மித்துள்ள ஃபௌல் பொயின்ட் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு கடற்படை அதிகாரிகள் உட்பட 13 கடற்படையினர் காணாமல் போயிருந்ததாக முன்னைய தகவல்கள் தெரிவித்தன.
சக்தி
சக்தி என்ற மூலத்தின் முழு விபரத்தையும் இணைத்தால் நல்லா இருக்கும்.
சங்கதி சொல்கிறது:
....மற்றொரு டோறா படகுடன் திருமலைத் துறைமுகத்திலிருந்து இன்று அதிகாலை வெளியே இப்படகு சென்ற சற்று நேரத்தில் வெடித்துச் சிதறியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். தற்கொடைத் தாக்குதல் மூலமே தமது படகை விடுதலைப் புலிகள் தகர்த்திருக்கலாம் என <b>கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்</b>....
http://www.eelatamil.net/sankathi/index.ph...=1187&Itemid=26
புதினம் சொல்கிறது:
இந்த டோரா படகை <b>ஒரு தற்கொலைக் குண்டுதாரி அல்லது குண்டுகள் பொருத்தப்பட்ட வெற்றுப்படகு மோதியிருக்கலாம் என்று தாம் நம்புவதாக </b>கடற்படைத் தரப்பின் பேச்சாளர் ஜயந்த பெரேரா தெரிவித்தார்.

