Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஜயகாந்த்துக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
#11
[size=18]<b>எனக்கா.. நெஞ்சு வலியா?: விஜயகாந்த்</b>
ஜனவரி 07, 2006

சென்னை:

எனக்கு நெஞ்சு வலி என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்று நடிகர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



நடிகர் விஜயகாந்த்தின் கல்யாண மண்டபம் இடிபடப் போவதாக வெளியாகி வரும் செய்திகளால் விஜயகாந்த் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. நிலத்தை ஆர்ஜிதம் செய்வது தொடர்பான பணிகள் தொடங்கி விட்டன.

இந் நிலையில் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் விஜயகாந்த் திடீரென மெட்ராஸ் மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதை டாக்டர்களும் உறுதிப்படுத்தினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று பிற்பகலுக்கு மேல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். வீடு திரும்பிய விஜயகாந்த்தைத் தொடர்பு கொண்டு பேசியபோது, எனக்கு நெஞ்சு வலி ஏதும் இல்லை. அப்படி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. நான் நலமாகத்தான் இருக்கிறேன். தொண்டர்கள் அச்சப்படத் தேவையில்லை.

கட்சி ஆரம்பித்த பின்னர் சுற்றுப்பயணத்தில் உள்ள நான் பொதுவான ஒரு செக்கப்பை செய்து கொண்டால் நல்லது என்று வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள் அறிவுரை கூறினர். இதனால்தான் அனைவரிடமும் சொல்லி விட்டுத்தான் மருத்துவனைக்கு சென்றேன்.

அங்கு அனைத்துப் பரிசோதனைகளும் செய்து பார்த்தனர். எனக்கு ஒன்றும் இல்லை, நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து வீடு திரும்பி விட்டேன். நெஞ்சு வலி வந்திருந்தால் இப்படி சாதாரணமாக பேசிக் கொண்டிருக்க முடியுமா.? எனவே தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும், நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்றார் விஜயகாந்த்.

இதற்கிடையே விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், விஜயகாந்த்துக்கு நெஞ்சு வலி ஏதும் இல்லை. அப்படி வெளியான செய்திகளில் உண்மை இல்லை. தொண்டர்கள் கவலைப்படத் தேவையில்லை.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்குச் சென்றார். தற்போது வீடு திரும்பி விட்டார். ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 20ம் தேதி முதல் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று கூறியுள்ளார்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 01-06-2006, 06:51 AM
[No subject] - by Sriramanan - 01-06-2006, 08:55 AM
[No subject] - by வினித் - 01-06-2006, 09:01 AM
[No subject] - by rajathiraja - 01-06-2006, 09:01 AM
[No subject] - by MUGATHTHAR - 01-06-2006, 09:41 AM
[No subject] - by vasanthan - 01-06-2006, 09:46 AM
[No subject] - by rajathiraja - 01-06-2006, 09:46 AM
[No subject] - by வினித் - 01-06-2006, 10:07 AM
[No subject] - by ஈழமகன் - 01-07-2006, 02:08 AM
[No subject] - by Vaanampaadi - 01-07-2006, 11:11 AM
[No subject] - by samsan - 01-07-2006, 12:26 PM
[No subject] - by MEERA - 01-07-2006, 12:55 PM
[No subject] - by samsan - 01-07-2006, 09:19 PM
[No subject] - by தூயவன் - 01-08-2006, 05:54 AM
[No subject] - by aathipan - 01-08-2006, 08:35 AM
[No subject] - by sinnappu - 01-08-2006, 11:44 AM
[No subject] - by tamilini - 01-08-2006, 01:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)