Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஓங்கத் தொடங்கியிருக்கும் தொப்புள்கொடி உறவுகளின் குரல்கள்!!!
#1
விடுதலைப் புலிகளுடன் மலையகக் கட்சிகள் இணைவு: கலைஞர் கருணாநிதி வரவேற்பு

[சனிக்கிழமை, 7 சனவரி 2006, 07:01 ஈழம்] [புதினம் நிருபர்]

<span style='color:red'>மலையக மக்கள் முன்னணியும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளோடும் விடுதலைப் புலிகளோடும் புரிந்துணர்வை ஏற்படுத்தி செயற்பட ஆரம்பத்திருப்பது புதிய நம்பிக்கையையும் திருப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.


சென்னையில் உள்ள கலைஞர் மு.கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பெரியசாமி சந்திரசேகரன் சந்தித்து உரையாடிய போது அவர் இதனை கூறியுள்ளார்.

[size=18]இலங்கையில் தற்போது உருவாகி வருகின்ற யுத்த சூழலில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தனக்கு மிகுந்த கவலையை அளிப்பதாக தெரிவித்த கலைஞர் கருணாநிதி, இலங்கை வாழ் சகல தமிழ் மக்களும் உரிமையோடு வாழ்கின்ற நிலைமை நிரந்தரமாக ஏற்படுவதையே தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.</span>
<span style='color:red'>ஈழத் தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் அதன் ஏற்பாட்டளர்களான வைகோ, கி.வீரமணி, இராமதாஸ், பழ.நெடுமாறன் ஆகியோரால் வலியுறுத்தப்பட்ட தீர்மானத்தில் தனக்கு எதுவிதமான முரண்பட்ட கருத்துக்களும் இல்லை என தெரிவித்த கருணாநிதி, அடுத்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் போது ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாகவும் அர்த்தமற்ற கைதுகள் தொடர்பாகவும் அவருக்கு எடுத்துக்கூற உள்ளதாகவும் சந்திரசேகரனிடம் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதை கண்டு மனம் நொந்துள்ளதாகவும், ஆனால் தற்போது மலையக மக்கள் முன்னணியும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளோடும் விடுதலைப் புலிகளோடும் புரிந்துணர்வை ஏற்படுத்தி செயற்பட ஆரம்பத்திருப்பது புதிய நம்பிக்கையையும் திருப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

[size=18]ஈழத் தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவழி தமிழர்கள் விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து பார்வையாளர்களாக இருக்க விரும்பாது எனறும் தமது சக்திக்கு உட்பட்ட சகல முயற்சிகளிலும் பங்களிப்பினை முழுமையாக செலுத்தத் தயாராக இருப்பதாகவும் கலைஞர் கருணாநிதி இந்த சந்திப்பின்போது பெரியசாமி சந்திரசேகரனிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் தமிழகத் தலைவர்களான ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோஇ திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

http://www.eelampage.com/?cn=23165

[size=12]</span>
" "
Reply


Messages In This Thread
ஓங்கத் தொடங்கியிருக்கும் தொப்புள்கொடி உறவுகளின் குரல்கள்!!! - by cannon - 01-07-2006, 10:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)