01-07-2006, 09:42 AM
“தனி மனிதப் படையணியாய் நின்று
அரசியல் போர் புரிந்தவர் குமார்.”
ஜனவரி 05 இவரது நினைவு நாள்
தழிழர்கள் ஆண்ட பரம்பரையினர் மீண்டும் ஆள நினைக்கின்றனர் என்ற அடிப்டையில் தமிழர்களுக்கென ஒரு தனித் தேசத்தை உருவாக்க 1977 இலும், தொடர்ந்து 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலிலும், 1981 சர்வசன வாக்கெடுப்பிலுமாக தமிழ் மக்களால் ஆணை இடப்பட்டது. இந்த ஆணையானது தமிழ் மக்களுக்கு எப்பொழுதும் சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அதி முக்கிய கோட்பாட்டின் வழியே பிறந்ததாகும்.
எனினும், 1977 இலும் சரி, அதன் பின்னர் 2001 வரையிலும் சரி, தமிழர் வாக்குகளைப் பெற்று அவர்களது அரசியல் பிரதிநிதிகளாக, இலங்கைப் பாராளுமன்றம் சென்று, கதிரைகளை அலங்கரித்த எந்த ஒரு அரசியல் தலைவருமே இதனை மறந்து – தங்களுக்கு தமிழர் வழங்கிய ஆணையை மறந்து – தாங்கள் மேடை மேடையாக ஏறி வழங்கிய உறுதிகளை மறந்து, அவற்றை காற்றில் பறக்கவிட்டபடி, சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் எதிர்பார்த்தபடி, தமது நிரைகளில் இருந்து சறுக்கி விழத் தயாராகவே இருந்தார்கள்.
இது காரணமாக இளைஞர்கள் இவ்வாணையை ஏற்று, அகிம்சாவழியில் நம்பிக்கை இழந்து, ஆயுத ரீதியில் எமது உரிமைகளைப் பெற்றிட அணிதிரண்டனர்.
தனியரசுக்கு தமிழர் ஆணை வழங்கிருந்தும், மாவட்டசபைகளோடு திருப்திப்படத் தயாராகவே தமிழ் அரசியல் தலைமைகள் இருந்தன. அதற்காகவே சர்வகட்சி மகாநாடு, வட்டமேசை மகாநாடு என குந்தி எழும்பி, அதில் குதூகலிக்கவும் செய்தனர். இந்த நிலையில்தான் மீண்டும் ஒரு தடைவருகிறது. 1983 களில் இலங்கைத் தமிழன் எரியூட்டப்படுகின்றான். இம் முறை பௌத்த பேரினவாத்தின் உண்மை முகம் சர்வதேசத்துக்குத் தெரியவருகிறது. “உயிர்களைக் கொல்லுவது பாவம் ; ஆனால் அதைவிடப் பாவம் தமிழர்களைக் கொல்லாமல் விடுவது” என புத்த பிக்குகளே முன்னின்று இந்த இனக் கொலை நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். இது ஈழத் தமிழர்களை அரசியல் புகலிடம் கோரி வெளிநாடுகளுக்கு படையெடுக்க வைக்கின்றது. குறிப்பாக இந்தியா நோக்கிய தமிழர்களது இடப்பெயர்வு காரணமாக, இந்தியாவினது ஒழுங்கமைபின் கீழ் இலங்கையினது விடுதலை கோரும் இயக்கங்களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று 1985 ஜூலை 13 இல் திம்புவில் இடம்பெறுகிறது. இப் பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட இலங்கைத் தமிழரின் ஆறு விடுதலை அமைப்புகளும் ஒருமித்து தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை முன் வைத்தன. இதன் அடிப்படையிலே அமையும் எந்த ஒரு அரசியல் தீர்வே சிங்களவர் தமிழர்களுக்கிடையிலான பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்ற யதார்த்த நிலையினை சர்வதேசமும் அறிய உதவினர்.
வழமைபோல சிங்களப் பேரினவாதம் இதனை அங்கீகரிக்க மறுத்தது. திம்புப் பேச்சுவார்த்;;;;தையும் முறிந்தது. தமிழ் இளைஞர்கள் தமது ஆயுதப் போராட்டத்தினையே முழுமையாக நம்பும் நிலைக்கு அவர்களைச் சிங்களப் பேரினவாதிகள் தள்ளிச் சென்றனர். இது எமது தேசத்தின் கடந்தகால வரலாறு. இங்கே தமிழர்கள் தமது உரிமைகளை அகிம்சை ரீதியில் கோரிநின்ற போதும் சரி, பின்னர் ஆயுத ரீதியில் பெற்றுக் கொள்ள முனைந்த போதும் சரி, தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற கோட்பாட்டினை, உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஆழமாகவும் ஆணித்தரமாகவும் வலியுறுத்தி வந்தவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் 1944 ஆகஸ்ட் மாதமளவில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியானது இக் கோட்பாட்டினையும் அடிப்படையாகக் கொண்டே உதயமாகியது என்பதும் இவரது இந்தச் செயற்பாட்டிற்கு காரணமாயமைந்திருக்கலாம்.
ஏதோ ஒரு வகையில் தமிழ் அரசியல் தலைவர்களை ஏமாற்றியபடி, இலங்கைத் தீவின் தமிழின அழி;ப்பிலும், தமிழ் நில ஆக்கிரமிப்பிலும், இலங்கை அரசு தொடர்ந்தும் தனது அரசியல் நாடகத்தை அரங்கேற்றத் தவறவில்லை. ஜெயவர்த்தனா, பிரேமதாசச, விஜயதுங்கா, சிறிமா, சந்திரிகா, ரணில் என நீளும் இந்தப்பட்டியலில் விஜயதுங்கா சற்று வித்தியாசமான ஒரு நிலைமையைத் தமிழர் தொடர்பில் எடுக்கத் துணிகின்றார். இலங்கைத் தீவு சிங்களவர் நாடு என்றும், தமிழர்கள் சிறுபான்மை இனத்தவர் மட்டுமன்றி, மரத்தில் படரும் கொடிகளைப் போன்றவர்கள் என்றும், இலங்கையில் நிலவுவது இனப்பிரச்சனை என்ற ஒன்று அல்ல எனவும், இங்கு பயங்கரவாதப் பிரச்சனை மட்டுமே நிலவுவதாகவும், நிறுவ முயலுகின்றார். இவரது இந்த நிலையையே சந்திரிகாவும் லக்ஸ்மன் கதிர்காமரது துணையோடு ஆரம்பத்தில் சர்வதேசத்தில் பரப்பத் துணிகின்றார். இந்த நிலமையில் கூட தனி;த்து நின்று மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் உள்நாட்டு ஊடகங்கள் மூலமாகவும், சர்வதேச கலந்துரையாடல்களுடாகவும், இவர்களது இந்த வாதத்தை பொய்யெனத் தோலுரித்துக் காட்டும் செயல்களில் துணிந்து ஈடுபட்டார்.
காலத்தின் தேவைகருதி, அந்த அந்தக் கால அரசியல் நிலைக்கு ஏற்ப சிங்களத் தலைமைகள் தூக்கிப்பிடிக்கும் தீர்வுப் பொதிகளை – மாயமான்களை – தமிழ்மக்களுக்கு விளக்கி நின்றதுடன், திம்புக் கோட்பாட்டின் அடிப்படையினையே குழிதோண்டிப் புதைப்பதற்காகவே அவை முன்வைக்கப்படுகின்றன இவற்றை ஆராய முற்படுவதோ, சிங்களத் தலைவர்களோடு சேர்ந்து கதைப்பதோ நாம் எமது எதிர்கால தமிழ் சமுகத்திற்கு செய்யும் கேடாக அமையும் என்பதை அழுத்தமாக உரைத்து நின்றவர் குமார் அவர்களே.
1990 களில் இலங்கையினது இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள்தான் பிரதான உரிமைதாரர்கள் என்றும், அவர்களது நிலைப்பாடு என்பது 1985 ஜூலையில் திம்புவில் முன்வைக்கப்பட்ட அந்த நான்கு பிரதான கோட்பாடுகளுமே என்பதனையும் சர்வதேசத்தின் முன்னே எடுத்துச் சென்றவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களே.
இவர் தனது கட்சி சார் அரசியலை இவ்வாறு முன்னெடுத்துச் செல்லும் போது, தலைநகரிலே தனிமனிதனாக நின்று செயற்படும் போது, தனக்கு பேரினவாதிகளால் வரக்கூடிய ஆபத்தினைப் பற்றியும் அறிந்தே இருந்தார். இருந்தும், இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்களின் குரலை, அந்நிய சிங்கள இராணுவம் ஒலிக்க விடாமல் தடுத்திருக்கும் போது, தமிழ் இனத்தினுடைய நிலைப்பாட்டை உலகறியச் செய்யக்கூடிய நிலையில் இருக்கும் கொழும்பு வாழ் தமிழர்கள் ஒலிக்காதிருப்பது எவ்வளவு வேதனையானது என்று கூறியபடி தனது விடுதலைக் குரலை ஓங்கி ஒலித்தவர் இவர்.
1966 களில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் வாலிபர் முன்னணிச் செயலாளராகத் தெரிவாகி அரசியலுக்குள் நுழைந்த குமார் அவர்கள், தனது கால் நூற்றாண்டுகால அரசியல் வாழ்வுக்குப் பின்னர் ஒரு பக்குவப்பட்ட, முதிர்ந்த அரசியல்வாதியாகி, தமிழர்களது அரசியல் நிலை தொடர்பாக தீர்க்கதரிசனத்தோடு கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியவர். ஆரம்பத்தில் இவர் கூறிய கருத்துக்களை எதிர்த்தவர்கள் கூட பின்நாளில் குமாருடைய அரசியல் கருத்துக்களின் நியாயத் தன்மையினையும், நிதர்சன உண்மைகளையும் உணர்ந்து தெளிவு பெற்றவர்களாக மாறியமை வரலாறு.
குமாருடைய மரணச் செய்தி சர்வதேச ரீதியில் கூட ஒரு சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு இலங்கைத் தமிழர்களது அரசியல் அடிமை வாழ்வு பற்றி இவர் அடிக்கடி தெரிவித்த நியாயபூர்வமான கருத்துக்கள் காரணமாயிருக்கலாம். இவரது மரணச் செய்தி அறிந்து, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கையொப்பம் இட்டு வெளியிட்ட அறிக்கை கூட சர்வதேச சமூகத்தை ஈர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தேசியத் தலைவரால் இவருக்கு “மாமனிதர்” என்ற கௌரவம் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உரிய இடத்தில் இருந்து, இவருக்கு கிடைத்த இந்த உண்மை கௌரவம் தழிழுலகம் உள்ளவரை இவரது பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்.
ஜி.சந்திரன்
திருமலை

www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>