01-07-2006, 08:51 AM
<span style='font-size:25pt;line-height:100%'>கண்ணைக் கட்டி கோபம்
\"கோபம் கோபம்
கண்ணைக் கட்டி கோபம்
பாம்பு வந்து கொத்தும்
கண்ணாடி வந்து வெட்டும்\"
இந்த கோசத்தை சிறுவயதில் நாம் எல்லோரும் நாளுக்கு ஒரு தடவை என்றாலும் உச்சரிப்போம். பாடசாலையில் கோபம் போடுவதும் பின்னார் நேசம் என்று கையை நீட்டுவதும் சர்வசாதரணம். \"அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா\" என்பதைப் போல் பாடசாலை நாளில் இது எல்லாம் சகஜம் எமக்கு.
தற்சமயம் ஒருவருடன் கோபம் போட்டுவிட்டால் ஒரு குழுவே கோபமாய் தான் இருக்கும். முக்;கியமானது ஏ வகுப்பில் நாம் இருந்தால் பி வகுப்பினாருடன் ஒரு சண்டை. யார் கூட மார்க்ஸ் எடுப்பது யார் பேச்சுப்போட்டியில் பரிசு பெறுவது என்று. அதற்கு சில ஆசிரியார்களும் உடந்தையாக இருந்தது இப்போது நினைக்கும்போது சிரிப்பாக இருக்கும்.
நான் படித்த பாடசாலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூசை நடக்கும். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு அந்த பூசை தொடரும். ஓவ்வொரு கிழமையும் ஒவ்வொரு வகுப்பினர் பூசையைப் பொறுப்பு எடுத்துச் செய்வார்கள். எங்கள் முறைவரும்போது மற்ற வகுப்பை விட நிறையப் பூக்கள் மாலைகள் என்று கொண்டு போவதில் இருந்து பிரசாத விடயங்கள் வரை போட்டி தான். பூசையின் போது பெரிய அக்காமார் சிவபுராணம் சொல்லி தர நாம் சொல்ல வேண்டும். நமது பூசை என்றால் சத்தமாக சொல்லுவோம். மற்ற வகுப்பு என்றால் வேணும் என்று சொல்லி வைத்து முணு முணுப்போம். இந்த காரணத்துக்காகவே பல தடவை அதிபரின் அறையில் கால் கடுக்க நின்ற ஞாபகம்.
கோபம் போட்டு சில நண்பிகளுடன் ஒரு வருடம் என்று கூட கதைக்காமல் இருந்தி;ருக்கிறோம். கோபம் என்றால் றோட்டில் போகும் போது பட்டம் சொல்வது சைக்கிளால் இடிப்பது என்று எவ்வளவோ கிறுக்குத்தனம் எல்லாம் செய்திருக்கின்றோம். அதை கோபக்காரர்கள் அவர்கள் வீட்டிற்கு போய் சொல்ல நமது வீட்டிற்கு வந்துவிடுவார்கள் ஒப்பிணை சாட்சிக்கு. இதில் பங்கு ஏற்று வருபவர்கள் கட்டாயம் அம்மாம்மா அப்பம்மாமார்கள் தான் இருக்கும். எங்கள் வீட்டில் ஒரு கெட்ட பழக்கம். ஒப்பிணை சாட்சிக்கு வருபவர்களிடம் நம்ம பிள்ளை அப்படி செய்ய மாட்டாள் என்று சொல்லவே மாட்டினம். இப்படி நடந்ததா என்று கூடக் கேட்கமாட்டார்கள். முற்றத்தில் உள்ள கிழுவை மரக் கம்பு முறிபடும். அதுவும் கோபக்காரி முன்னால் தான் பூசை நடக்கும். அதை விட கெட்ட விடயம் எதுவுமே இருக்காது. பின்னர் அந்த கோபக்காரிக்கு துணிவு வந்திடும். பாடசாலையில் எதாவது செய்தால் அம்மம்மாவைக் கூட்டிக்கொண்டு வருவேன் என்று மிரட்டல் விடுவா. அந்த மிரட்டலுக்கும் பணிந்த ஞாபகம்.
ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருந்து (எத்தனையாம் ஆண்டு என்று ஞாபகம் இல்லை) தாயகம் நோக்கி பலர் வந்திருந்தார்கள். அதுவும் அந்த கோபக்காரியின் வீட்டிற்கு. அவா நிறைய வெளிநாட்டுச் சாமான்களை எல்லாம் கொண்டு வந்து படம் காட்டுவா. எரிச்சலாகத் தான் இருக்கும் ஆனால் என்ன செய்வது நம்மடை ஆட்கள் யாருமே அந்த காலத்தில் தாயகத்திற்கு வரவில்லையே… கோபக்காரி பக்கத்து வீடு என்றாலும் அவர்கள் வீட்டில் இருந்து வரும் சாப்பாடுகளை கூடச் சாப்பிடமாட்டோம். அவ்வளவு ரோசம் நமக்கு. ஆனால் கடைசியில் அந்த கோபக்காரிகளில் ஒருத்தி இதயத்தில் ஓட்டை என்ற காரணத்துக்காய் நம்மை விட்டு போனபோது நாம் கதறிய கதறலுக்கு கூட நேசம் போடமால் அந்த கோபக்காரி; கோபமாகவே போனாள்.
( அட ரமாக்கு என்ன நடந்தது என்று யோசிக்கிறீர்களா? இன்னொரு கோபக்காரியை எதிர்பராது சந்தித்த சந்தோசத்தில் தான் இப்படியெல்லாம் எழுதத் தோன்றியது. நண்பர்களே! உங்களுக்கும் இப்படி எதாவது கோபக்காரர்கள் இருந்திருந்தால் அவர்களைப்பற்றி எழுதுங்களேன்)</span>