01-07-2006, 05:01 AM
Vaanampaadi Wrote:ஈவிரக்கமற்ற புலிகள் இயக்கம் மீது கடும் நிலைப்பாடு எடுக்கவேண்டும்
அமெரிக்காவிடம் மங்கள வேண்டுகோள்
விடுதலைப்புலிகளை அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான, ஈன இரக்கமற்ற கொலைகார இயந்திரம் என்று விபரித்திருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, புலிகள் தொடர்பில் அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நிதியளிக்கும் புலம் பெயர்ந்த குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர் வாஷிங்டன் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
புலிகள் விடுதலை இயக்கமொன்றுடன் தொடர்பு கொள்ளவில்லை. அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான ஈவு இரக்க மற்ற கொலைகார இயக்கத்துடனேயே தொடர்புகளை கொள்கின்றார்கள் என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளை "நவீனகால பயங்கரவாதத்தின் ஞானத் தந்தைகள்" என்று குறிப்பிட்டுள்ள மங்கள சமர வீர, தற்கொலைக் குண்டுகள் மற்றும் கப்பல்கள் மீதான விரைவுப் படகு தாக்குதல்கள் போன்ற விடுதலைப்புலிகளின் நுட்பங்களில் சிலவற்றை கூட அல்- ஹைடா கைக்கொள்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீர கொண்டலீசா ரைஸையும் ஏனைய அதிகாரிகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
Thinakural
"ஈவிரக்கமற்ற புலிகள் இயக்கம் மீது கடும் நிலைப்பாடு எடுக்கவேண்டும்."
ஹ்ம்ம்.. ஈவும் இரக்கமும் மில்லியன் கணக்கில கொண்ட சிறீலங்கா வின் அமைச்சர் சொல்லி இருக்கார் .. தேவைதான்!
விடுதலைப்புலிகளை அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான, ஈன இரக்கமற்ற கொலைகார இயந்திரம் .
"வாஃவ்வ்"......... தர்சினிய உடம்பெல்லாம் கத்தியால
..குத்து குத்து எண்டு குத்திவிட்டு.. கல்லைக்கட்டி கிணத்தில போட்டிங்களே..
அல்-ஹைடாவ விட நீங்க மோசமான இயந்திரம் இல்லையா?
அட சொல்லவே இல்ல :wink:
"விடுதலைப் புலிகளை "நவீனகால பயங்கரவாதத்தின் ஞானத் தந்தைகள்" என்று குறிப்பிட்டுள்ள மங்கள சமர வீர"
டடடா......... இது வேறயா?
அப்போ 4 வயசு குழந்தையை.. சுட்டு கொன்றுவிட்டு ..மன்னாரில...வீட்டுக்குள்ள போட்டு எரிச்ச நீங்கள்.. எந்த காலத்தின் ஞான தந்தைகள்?
:புலிகள் விடுதலை இயக்கமொன்றுடன் தொடர்பு கொள்ளவில்லை. அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான ஈவு இரக்க மற்ற கொலைகார இயக்கத்துடனேயே தொடர்புகளை கொள்கின்றார்கள் என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.:
ஓஹோ ...பின்னிட்டீங்க...
செப்டம்பர் 11 க்கு பிறகு உலகத்தில ஒரு விடுதலை இயக்கம் ஒண்டு இருக்கு ..என்று அமெரிக்கா எப்போ சொல்லிச்சு?
அதை விடுங்க என்னது... அல்ஹைடாவ விட ஈவு இரக்கம் அற்ற கொலைகார இயக்கத்துடன் புலிகள் தொடர்பா?
அந்த இயக்கம் எங்க இருக்கு?
அல்ஹைடாவே உலகின் ஈவு இரக்கம் அற்ற இயக்கம் என்று சொல்லி ஏமாந்து கொண்டு இருக்கிற அமெரிக்காக்கு ..உண்மையை சொல்லாம விட்ட உங்களை என்னவென்று சொல்ல??
அட தமிழனை கொல்ல ஹெல்ப் பண்ணுங்க எண்டு நேரடியா கேக்கலாம் தானே.. அதுக்கு ஏன் இவ்ளோ பில்ட்-அப்??
8) [/b]
-!
!
!

