01-07-2006, 02:43 AM
நான் லண்டனில் எம்மூலையில், எவ்வேலைகளிலிருந்தாலும், இரவு 8 மணி முதல் 9 வரை ரி.ரி.எனின் முன்னிற்கத் தவறுவதில்லை! அதுவும் குறிப்பாக பிரதி திங்கள் தோறும் நடைபெறும் "ஊர்நோக்கி" என்னை ஈழத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறது! எம் கிராமங்களின் வாழ்வு/வளம்/அழிவு/மீளல்/எழுச்சி என அற்புதமாக விவரணப்படுத்தப்பட்டு கவிஞன் வீராவின் குரலில் வெளிப்படும்போது எம்மையே மறந்து, அங்கு சென்று விடுகிறோம்!! ....
.... கடந்த சில கிழமைக்களுக்கு முன்னர் இடம்பெற்ற "ஊர்நோக்கி"யில், நான் சிறியவனாக இருந்தபோது எனது பாடசாலைகால விடுமுறைகளைக் கழித்த "பரந்தன் குமரபுரம்" காண்பிக்கப்பட்டது. ஒரு செழுமை/செல்வம் நிறைந்த விவசாயக் கிராமத்தின் பாரிய அழிவின் பின்னான மீளெழுச்சியை காணக்கூடியதாகவிருந்தது.....
.... இப்படியாக சிறந்த சிற்பிகளால் செதுக்கப்படும் த.தே.தொ இட்கு என்னாலான உதவிகளைச் செய்யத் தயாராகவிருக்கிறேன். இங்கு சிலர் குறிப்பிட்டதுபோல ஒரு நிகழ்ச்சி தயாரிப்புக்கோ அல்லது அதை இணையமொன்றின் மூலம் மீளொளிபரப்பு செய்வதற்கு ஏற்படும் செலவுகளை பொறுப்பேற்கலாம்.
பி.கு: களத்தின் பலமே புலமாகவிருக்கும் போது, களத்தையும், புலத்தையும் இணைக்கும் பாலமாக தமிழீழ தேசிய தொலைக்காட்சி செயற்படுவதும், அதனை வளர்க்க நாம்தான் தோள் கொடுக்க வேண்டுமென்பதில் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை. ஆனால் சில சந்தர்ப்பங்களில் பாரிய தடங்கல்களையும் இத்தொலைக்காட்சி சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். ஐரோப்பிய யூனியனின் கொள்கை மாற்றங்கள்/தொடங்கப்போகும் இறுதி ஈழ யுத்தம்... போன்றன இடைஞ்சல்களை ஏற்படுத்தலாம்.

" "