Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் பகுதி வன்முறையினைத் தொடர்ந்து மக்கள் இடம் பெயர்வு
#1
யாழ் பகுதி வன்முறையினைத் தொடர்ந்து மக்கள் இடம் பெயர்வு

இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள இராணுவ பாதுகாப்பு மற்றும் பதட்ட நிலைமை காரணமாகக் கடந்த ஒரு வார காலத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளன.


இடம் பெயர்ந்த குடும்பங்கள்

இக்குடும்பங்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூனகரி, புதுக்குடியிடிருப்பு ஆகிய இடங்களில் பொது இடங்களிலும், உறவினர் நண்பர்களது வீடுகளிலும் தங்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உருத்திரபுரம், விநாயகபுரம், பாரதிபுரம், தொண்டமான்நகர் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்திலிருந்து இவ்வாறு குடும்பங்கள் இடம்பெயர்ந்து வன்னிப்பகுதிக்கு வருவது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரீ.இராசநாயகம், இந்தக் குடும்பங்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறினார்.


அடுத்தது என்ன?

போரக்காலச் சூழ்நிலையைப்போல, போர்நிறுத்த காலத்திலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி இடம் பெயர்ந்துள்ள இக்குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து வவுனியா செய்தியாளர் பி.மாணிக்கவாசகம் அவர்களின் பெட்டக நிகழ்ச்சியில் கேட்கலாம்.

நன்றி:பிபிசி
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
யாழ் பகுதி வன்முறையினைத் தொடர்ந்து மக்கள் இடம் பெயர்வு - by வினித் - 01-06-2006, 07:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)