Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொ
#1
வெள்ளி 06-01-2006 21:55 மணி தமிழீழம் [நிருபர் நல்லகண்ணு]

இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளேன் - மு.கருணாநிதி
கொழும்பிலும் மலையக பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக இந்திய மத்திய ஆளும் கூட்டணி கட்சிகளின் ஒன்றான திராவிட முன்னோற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் திராவிட முன்னேற்றகழக தலைவரை சென்னையில் இன்று சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டு வரும் நிலைமை தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்துள்ள கலைஞர் இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் உரிமையோடு வாழும் நிரந்தரமான நிலை ஏற்படுவதையே தான் எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தான் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அடுத்த கிழமை சந்திக்கும் போது இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அங்கு இடம்பெறும் அர்த்தமற்ற கைதுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Pathivu
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொ - by Vaanampaadi - 01-06-2006, 06:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)