01-06-2006, 03:29 PM
Mathuran Wrote:என்னப்பா பட்டி மன்ற உரையாடல் பகுதியில் இப்படி கேவலாமாக உரையாடலாமா?? நானும் பட்டிமன்றம்முடிந்த பின் கருத்தை முன்வைக்கலாம் என காத்திருக்கின்றேன். பட்டிமன்றம் இப்போதைக்கு முடியுமா இல்லை இப்படி கதைத்தே காலத்தை போக்கப் போகின்றீர்களா?????
அக்கா என்ன துணிந்து நடவடிக்கையில் இறங்குங்கோ. நடுவரின் கருத்திற்கு அனைவரும் கட்டும் படும் பண்பினை வளர்த்துக்கொள்ளுங்கள் உறவுகளே.
இது என்னைச் சுட்டிகாட்டுவதாக இருப்பின் அதற்கு பதில் தரவேண்டிய கடப்பாடு உண்டு. ஏனென்றால் இப்பகுதியில் அரட்டை அடித்தவர்களில் நானும் ஒருவன்.
இருக்க பட்டிமன்றத்தை கேலி செய்யும் எண்ணம் எமக்கில்லை. நானும், தலயும் நக்கல் அடித்தற்கு தமிழினியக்கா கூட நகைச்சுவையான பதிலைத் தான் தந்திருந்தார். அது கேவலமாகப் போயிருக்கும் என்று நான் கருதவில்லை.
மற்றும்படி பட்டிமன்றத்தின் தாமதத்துக்கு நாம் காரணமல்ல. ஒழுங்குவரிசைப்படி தான் தினமும் நடந்தது. குறிப்பிட்ட உறவு ஒருத்தரின் தாமத்தால் தான் 3நாட்கள் அமைதியாகப் போய்க் கொண்டிருக்கின்றது.
அரட்டை அடிப்பது இத் தலைப்பில் மட்டுமல்ல, எல்லாத்தலைப்பிலும் நடக்கின்றது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
மேலும் நாம் எவ்வகையிலும் பட்டிமன்றத்தில் நடந்த கருத்துக்களை கொச்சைப்படுத்தவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு அறிவுரை சொல்வதற்கு முன்வாருங்கள்
[size=14] ' '

