Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் இயக்கம் மீது கடும் நிலைப்பாடு;மங்கள சமரவீர
#1
ஈவிரக்கமற்ற புலிகள் இயக்கம் மீது கடும் நிலைப்பாடு எடுக்கவேண்டும்

அமெரிக்காவிடம் மங்கள வேண்டுகோள்

விடுதலைப்புலிகளை அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான, ஈன இரக்கமற்ற கொலைகார இயந்திரம் என்று விபரித்திருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, புலிகள் தொடர்பில் அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நிதியளிக்கும் புலம் பெயர்ந்த குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர் வாஷிங்டன் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

புலிகள் விடுதலை இயக்கமொன்றுடன் தொடர்பு கொள்ளவில்லை. அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான ஈவு இரக்க மற்ற கொலைகார இயக்கத்துடனேயே தொடர்புகளை கொள்கின்றார்கள் என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளை "நவீனகால பயங்கரவாதத்தின் ஞானத் தந்தைகள்" என்று குறிப்பிட்டுள்ள மங்கள சமர வீர, தற்கொலைக் குண்டுகள் மற்றும் கப்பல்கள் மீதான விரைவுப் படகு தாக்குதல்கள் போன்ற விடுதலைப்புலிகளின் நுட்பங்களில் சிலவற்றை கூட அல்- ஹைடா கைக்கொள்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர கொண்டலீசா ரைஸையும் ஏனைய அதிகாரிகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

Thinakural
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
புலிகள் இயக்கம் மீது கடும் நிலைப்பாடு;மங்கள சமரவீர - by Vaanampaadi - 01-06-2006, 12:02 PM
[No subject] - by Thala - 01-06-2006, 12:46 PM
[No subject] - by தூயவன் - 01-06-2006, 03:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-06-2006, 04:59 PM
[No subject] - by தூயவன் - 01-07-2006, 04:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)