Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பில் மாபெரும் கண்டனப் பேரணி
#1
<b>நாளை கொழும்பில் மாபெரும் கண்டனப் பேரணி</b>

தலை நகர் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் தமிழ்மக்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினரால் அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்கு முறைகள், கைதுகளை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்டனப் பேரணி நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ஐந்துலாம்புச் சந்தியில் இடம்பெறும்.

மேலக மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்டனப் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி, மலையக மக்கள் முன்னணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, புதிய இடதுசாரி முன்னணி, புதிய ஜனநாயகக் கட்சி என்பன முழுமையான ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

மேலும், புகையிரத ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், ஹிரு அமைப்பு, சமாதானத்துக்கான பெண்கள் அமைப்பு என்பனவும் இந்த கண்டனப் பேரணியில் கலந்து கொள்வதற்கு முன்வந்துள்ளன.

அதேநேரம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் இது தொடர்பாக நேற்று புதன்கிழமை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் எந்தவொரு பிரதிநிதியும் கலந்து கொள்ளவில்லையென்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகனேசனுடன் தொடர்பு கொண்டு இந்த கண்டனப் பேரணிக்கு தமது கட்சி முழுமையான ஆதரவு வழங்குமென்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறே ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தான் நேரடியாக இந்த கண்டனப் பேரணியில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், இந்தக் கண்டனப் பேரணி தொடர்பாக விசேட கூட்டமொன்று நேற்று புதன் கிழமை மாலை கொழும்பு மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள சமூக சமய நடுநிலையத்தில் நடைபெற்றது.

இந்த விசேட கூட்டத்தில் மேலக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி ந.குமரகுருபரன், பொதுச் செயலாளர் ந.ஜெயரட்ணராஜா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.என். ரவிராஜ், புதிய ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.தம்பையா, புதிய இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தர் வீ.திருநாவுக்கரசு, சமாதானத்துக்கான பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தர் நிமல்கா பெனாண்டோ, மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் மாநகரசபை உறுப்பினருமான கே.ரி.குருசாமி, அக்கட்சியின் கொழும்பு மாவட்ட அரசியல் அமைப்பாளர் என்.சிவகாந்தன், இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவர் ஸ்ராலின் உட்பட பல தொழிற்சங்க பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதேவேளை, தமிழ் மக்களுக்கு எதிரான அனாவசியமான பாதுகாப்பு படையினரின் அடாவடித்தனங்களை நிறுத்துமாறு கோரி நாளை நடைபெறும் கண்டனப் பேரணியில் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றுபட்டு கலந்து கொண்டு தமது ஒற்றுமையையும் பலத்தையும் வெளிப்படுத்துமாறு மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, கண்டனப் பேரணியை தொடர்ந்து அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் மகஜர் ஒன்றும் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி சூரியன்.கோம்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
கொழும்பில் மாபெரும் கண்டனப் பேரணி - by Mathuran - 01-06-2006, 12:51 AM
[No subject] - by Mathuran - 01-06-2006, 03:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)