Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களத்தின் சகோதர எழுத்தாளருக்கு முதல் பரிசு
#19
வாழ்த்திய அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள். கவியரங்கக்கவிதையையும் , பரிசுபெற்ற கதையினையும் விரைவில் இங்கு இணைக்கிறேன்.

அன்பகம் உங்கள் கருத்தினை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

தற்போது இங்கு பல அமைப்புக்கள் உருவாகியிருக்கின்றன அவை குறிப்பிட்ட வட்டத்தினுள் தம்மை முடக்கி வைத்து தமக்குத்தாமே பட்டமும் பட்டயங்களும் வழங்கிக்கொண்டிருக்கின்றன. திறமைகளுக்கு அப்பால் முகத்துதிகளுக்குக்கூட விருதுகள் கொடுப்பது , விழா எடுப்பது இன்று நாகரீகமாகிவிட்டது. இது பற்றி நாம் இன்னொரு தலைப்பில் கருத்தாடலாம் எனக்கருதுகிறேன்.

தமிழ்மன்றம் நடாத்திய விழாக்களில் முன்னெப்போதும் நான் கலந்து கொண்டதில்லை. இம்முறைதான் தமிழ்மன்றவிழாவில் கலந்து கொண்டுள்ளேன். பல விழாக்கள் பார்த்திருக்கிறேன். தமிழ் உயிர் மூச்சென்றென்ற முழக்கத்துடனான ஆரவாரத்துடன் ஆரம்பிக்கும். ஆனால் குறிப்பிட்ட சிலரது வாத்தியங்களை மட்டுமே கேட்கமுடியும். ஆனால் இந்த விழா இளம்தலைமுறையினரை 4வயதிலிருந்து 20வயதுக்கு உட்பட்ட இளையவர்களை உற்சாகப்படுத்திய நிகழ்ச்சி என்பது என் கணிப்பு. எனது குழந்தைகள் இருவரும் 11.30மணிவரையும் பொறுமையுடன் நிகழ்ச்சிகளை ரசித்தார்கள். சிறுவர் பேச்சு , பாடல் , குறள் மனனம் , கதைசொல்லல் நடனம் என இளையோரை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்திய நிகழ்ச்சியென்பதை மறுக்கமுடியாது.

விருதுகளும் , விழா எடுப்புக்களும் நல்ல கலைஞனையோ , நல்ல கலைப்படைப்பையோ தராது.
Reply


Messages In This Thread
[No subject] - by yarl - 12-26-2003, 10:37 PM
[No subject] - by anpagam - 12-27-2003, 12:17 AM
[No subject] - by vasisutha - 12-27-2003, 04:16 AM
[No subject] - by Paranee - 12-27-2003, 04:22 AM
[No subject] - by kuruvikal - 12-27-2003, 09:38 AM
[No subject] - by ampalathar - 12-27-2003, 11:24 AM
[No subject] - by இளைஞன் - 12-27-2003, 11:37 AM
[No subject] - by shanmuhi - 12-27-2003, 11:45 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:53 AM
[No subject] - by pepsi - 12-28-2003, 01:11 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 01:47 AM
[No subject] - by ampalathar - 12-28-2003, 08:41 AM
[No subject] - by kuruvikal - 12-28-2003, 11:30 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 01:55 PM
[No subject] - by vasisutha - 12-29-2003, 03:51 AM
[No subject] - by kuruvikal - 12-29-2003, 11:14 AM
[No subject] - by vasisutha - 12-29-2003, 06:10 PM
[No subject] - by shanthy - 12-29-2003, 08:44 PM
[No subject] - by anpagam - 12-29-2003, 11:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)