Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமைதிப் பேச்சுகளை நோர்வே தவிர்ந்த
#6
சமாதான முயற்சியில் மீண்டும் ஈடுபடவுள்ள சொல்ஹெய்முக்கு பேரினவாதிகளால் ஆபத்து
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாமென பேரினவாதிகளால் எச்சரிக்கப்பட்ட நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்இ மீண்டும் சமாதான முயற்சிகளில் ஈடுபடவுள்ளதால் அவரின் உயிருக்கு ஆபத்துள்ளதால் அரசாங்கம் அவருக்குப் போதிய பாதுகாப்பினை வழங்க வேண்டுமென ஊவா மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளருமான அ. அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கை இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அனுசரணையாளராக இருந்து அளப்பரிய பங்காற்றி வந்த எரிக் சொல்ஹெய்ம் தற்போது இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பொறுப்புமிகு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை சமாதான விரும்பிகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில் ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான பங்களிப்பினை நோர்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம் மேற்கொண்டிருந்ததை எவரும் மறுக்க முடியாது. அத்தகையவரையும் "வெள்ளைப்புலி" என்று விமர்சித்ததோடுஇ அவரை இந்நாட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாமென்று பேரினவாத சிறு கூட்டமொன்று கோஷமிட்டு வந்தது.

பேச்சுவார்த்தைகள் எந்த நாட்டில் நடத்தப்பட வேண்டும் என்பதில் கூட இணக்கப்பாட்டை மற்றும் விட்டுக் கொடுப்பினை முன்னெடுக்க முடியாத பேரினவாதிகள் ஏனைய விடயங்களில் எத்தகைய நிலைப்பாட்டினை மேற்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியாகும். பேச்சுவார்த்தை எந்த நாட்டில் நடைபெறல் வேண்டும் என்ற அற்ப விடயத்திலும் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பேரினவாத சிறு கூட்டம் எதிர்கால முன்னெடுப்புகளுக்கு எந்த வகையில் நடந்து கொள்வார்கள் என்பது புரியாத புதிராக இருக்கின்றது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷஇ நோர்வே அரசு இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான விடயங்களை மேற்கொள்ள தனியானதொரு அமைச்சகத்தை நியமித்திருப்பதை விரும்பியோஇ விரும்பாமலோ ஏற்க வேண்டிய நிலையிலுள்ளார். இதுபோன்று பேரினவாத சிறு கூட்டங்களின் கோஷங்களை ஜனாதிபதி உதாசீனம் செய்து இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான விடயங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான விடயங்களை மேற்கொள்ளும் வகையில் நோர்வே அரசு தனியானதொரு அமைச்சரை நியமித்திருப்பது பேரினவாதிகளுக்கு விழுந்திருக்கும் பலத்த அடியேயாகும்.

இதுவரை காலமும் அனுசரணையாளராக இருந்து வந்த எரிக் சொல்ஹெய்ம் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற ஸ்தானத்துடனேயேஇ இலங்கை இனப்பிரச்சினை தீர்வு நடவடிக்கைகளை இனிமேல் முன்னெடுக்க விருக்கின்றார். அவ்வேளையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற ரீதியில் அவருக்கான பாதுகாப்புகளை வழங்க வேண்டிய பாரிய பொறுப்பும் இலங்கை அரசைச் சார்ந்ததாகும்.

இத்தகையதோர் நல்ல சந்தர்ப்பத்தினை சம்பந்தப்பட்டவர்கள் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். இந் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதன் மூலமே இந்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மேலும்இ அண்மைக்காலங்களில் இடம்பெறும் சுற்றிவளைப்புகள்இ தேடுதல்இ பாதுகாப்புக் கெடுபிடிகள்இ கைதுகள் ஆகியனவும் நாட்டிற்கு ஆரோக்கியமான சூழலைத் தோற்றுவிக்காது. இத்தகைய நடைமுறைகளை அரசு தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இதுபோன்ற செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் தமிழ் மக்கள் அரசின் மீது அதிருப்தி கொண்டு தனி வழி போகக் கூடிய நிலை ஏற்படும். அண்மைக் காலமாக ஏற்பட்ட சம்பவங்கள் எம்மால் ஜீரணிக்க முடியாதிருக்கின்றன. இச் சம்பவங்கள் குறித்து மலையக மக்கள் முன்னணி பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன்இ இதுபோன்ற நடவடிக்கைகள் மலையகத்திலும் விஸ்தரிக்கப்படுமேயானால். "சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்பதற்கிணங்க ஏற்படப்போகும் எதிர் விளைவுகள் கட்டுக் கடங்காது போய்விடுவதுடன் அரசினாலும் சமாளிக்க முடியாமல் போய்விடும்.

லங்காசிறி
Reply


Messages In This Thread
[No subject] - by நர்மதா - 01-05-2006, 10:56 AM
[No subject] - by நர்மதா - 01-05-2006, 10:58 AM
[No subject] - by Birundan - 01-05-2006, 11:07 AM
[No subject] - by அருவி - 01-05-2006, 11:12 AM
[No subject] - by நர்மதா - 01-05-2006, 06:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)