12-28-2003, 11:30 AM
அன்பகத்தின் கருத்தும் வரவேற்க வேண்டிய ஒன்றே...திறமைகளுக்கு அப்பால் முகமறிந்தோர் உறவினர் தமிழ் தொண்டர் என நடிப்போர் படித்த பெருமக்கள் இன்னும் அரசியல் சாதி மதம் என்று பலவகைத் தோறணைகளில் பரிசில்கள் பல கண்ணை மூடிக் கொண்டு தவறான கைகளில் சேர்க்கப்பட்டுள்ளமைகளும் கடந்த காலங்களில் பல இடங்களில் நடந்துள்ளன....ஆனால் மேடையில் கவிதை ஒன்று பாராட்டுப் பெறுகிறதென்றால் அங்கு கவிதை சிறந்ததாக இருக்க வேண்டும் அல்லது நல்ல கலாரசிகர்களை மேடை கொண்டிருந்திருக்க வேண்டும்...எனினும் ஒரு சாதாரண படைப்பாளிக்கு அவனுக்குக் கிடைக்கும் ஒரு பாராட்டே போதும் அவனை ஓயவிடாது உந்தித்தள்ளி ஆயிரம் ஆயிரமாய் எழுதித் தள்ளுவதற்கு....அந்த வகையில் கண்ணறியா கேட்டறியா சாந்தியக்காவின் கவிதை பாராட்டப்பட்டத் தகுதியானது என்று நாம் நிச்சயம் கூறுவோம் காரணம் அவர் இங்கும் நல்ல பல கவிதைகளை விதைத்தே விட்டுள்ளார்...அது போதாதா நாம் பாராட்டிப் பெருமை கொள்ள....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

