01-05-2006, 12:05 PM
திருமலையில் பூரண கதவடைப்பு நிர்வாகம் முழுமையாக முடக்கம்
படுகொலையுண்ட மாணவர்களுக்கு பெருந்திரளான மக்கள் அஞ்சலி
தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நேற்று புதன்கிழமையும் திருகோணமலை நகரில் பூரண கதவடைப்பு இடம்பெற்றது.
பாடசாலைகள் இயங்கவில்லை. அரச, மாகாண சபை ஆகியவற்றின் திணைக்களங்கள் செயற்படவில்லை. திருமலை நகரசபை இயங்கவில்லை. வங்கிகள் செயற்படவில்லை. கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் தொடர்ந்தும் ஸ்தம்பித நிலையில் காணப்பட்டன.
செல்வநாயகபுரம் பகுதியில் பறக்கவிடப்பட்ட கறுப்புக் கொடிகளை படையினர் சிலர் பலாத்காரமாக அகற்றியதாகக் கூறப்பட்டது. திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் உடனடியாக திருகோணமலை மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயவர்தனவுடன் தொடர்புகொண்டு, இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களான எஸ்.
சஜேந்திரன், யோ.ஹேமச்சந்திரன், ம.ரஜீகர், த.சிவானந்தா, லோ.றொகாந்த் ஆகியோரின் பூதவுடல்கள் அவரவர் வாசஸ்தலங்களில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் பெரும் எண்ணிக்கையில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொது அமைப்புகள், பாடசாலைகள் சார்பில் மலர் வளையங்கள் சாத்தப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை பகல் திருகோணமலை இந்து மயானத்தில் நடைபெறவுள்ளன. அதற்கு முன்பாக பூதவுடல்கள் அவரவர் வீடுகளிலிருந்து திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளன. அஞ்சலி நிகழ்வுகளின் பின்னர் ஐந்து பூதவுடல்களும் ஊர்வலமாக இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
<b>தகவல்: தினக்குரல்</b>

[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI