01-05-2006, 10:58 AM
நோர்வே நாட்டுடன் பேச முடியாது: ஜே.வி.பி. நிராகரிப்பு
இலங்கை அமைதி முயற்சிகள் தொடர்பாக ஜே.வி.பி.யினருடன் பேச்சுகளை நடத்த தயாராக இருப்பதாக நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுத்திருந்த அழைப்பை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது.
ஜே.வி.பி.யின் பிரச்சாரப் பிரிவின் செயலாளர் விமல் வீரவன்ச கூறியுள்ளதாவது:
அமைதி முயற்சிகளுக்கான அனுசரணையாளர் என்ற நிலையிலிருந்து நோர்வே விலகினால் அந்த நாட்டுடன் எந்தப் பிரச்சனை குறித்தும் பேசுகிறோம். நோர்வேயை சிறிலங்கா நாட்டின் எதிரணியாகவே பார்க்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு அந்நாடு பக்கச்சார்பாக இருப்பதில் எமக்கு எதுவித சந்தேகமும் இல்லை.
நோர்வேயுடன் பேச்சுகளை நடத்தி எமது நேரத்தை நாம் வீணடிக்க விரும்பவில்லை என்றார் அவர்.
புதினம்