Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமைதிப் பேச்சுகளை நோர்வே தவிர்ந்த
#2
நோர்வேயில்தான் பேச்சு என்பதில் விடுதலைப் புலிகள் விடாப்பிடிநிலை
அடுத்த சுற்று அடுத்த கட்ட பேச்சு நோர்வேயில்தான். அதில் விட்டுக்கொடுப் புக்கு இடமில்லை. பேசுவது என்றால் நோர் வேயில். இல்லையேல் பேச்சு இல்லை.
இவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைமை மிக உறுதியாக இருப்பதாகத் தெரியவரு கின்றது.
பேச்சுக்கான முன் ஆயத்தங்கள் நடை பெற முன்னரே ஜே.வி.பியைத் திருப்திப் படுத்தும் நோக்கில் ஆசிய நாடு ஒன்றில்தான் பேச்சு என்று அரசுத் தரப்பு நிபந்தனை விதித்தமை புலிகளின் தலைமையை சீற்றத்துக் குள் ஆழ்த்தியிருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
ஆகவே இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்பதில்லை என்று புலிகளின் தலைமை மிக உறுதியுடன் இருப்பதாகத் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
""பேச்சுக்கான இடம் குறித்து நிபந்தனை யுடன் கூடிய அறிவிப்பை முதலில் விடுத்து நிலைமையைச் சிக்கலாக்கியது இலங்கை அரசுத்தரப்புத்தான். எனவே பொது இட மாகஇ இந்தப் பிரச்சினையில் அனுசரணைப் பணி வகிக்கும் நோர்வே தான் இதற்கு மாற் றான பொருத்தமான நிலையமாகும். எனவேஇ அங்கு சென்று முதலில் பேசுவோம். அப்பேச் சுகளின் போது அடுத்த சுற்றுப் பேச்சை எங்கே நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யலாம்'' என்று புலிகளின் தலைமை கூறுவ தாகத் தெரிகின்றது.
முதலில் ஆசிய நாடு ஒன்றில்தான் பேச்சு என்று நிபந்தனை விதித்த இலங்கை அரசுத் தரப்பு அதிலிருந்து இறங்கிஇ வேறுஓரிடத் தில் ஒஸ்கோ தவிர்ந்த ஏதேனும் ஐரோப்பிய நாட்டில் பேசலாம் என்ற நிலைப்பாட்டுக்கு இப்போது வந்திருப்பது பற்றிய தகவல் புலி களின் தலைமைக்குக் கோடிகாட்டப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
ஆனாலும் முதல் சுற்றுப்பேச்சு நோர்வே யில்தான் என்பதில் புலிகளின் தலைமை விட்டுக் கொடுப்புக்கு இடமின்றி உறுதியாக இருப்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.


லங்காசிறீ
Reply


Messages In This Thread
[No subject] - by நர்மதா - 01-05-2006, 10:56 AM
[No subject] - by நர்மதா - 01-05-2006, 10:58 AM
[No subject] - by Birundan - 01-05-2006, 11:07 AM
[No subject] - by அருவி - 01-05-2006, 11:12 AM
[No subject] - by நர்மதா - 01-05-2006, 06:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)