Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமைதிப் பேச்சுகளை நோர்வே தவிர்ந்த
#1
புலிகளுடனான அமைதிப் பேச்சுகளை நோர்வே தவிர்ந்த வேறு ஒரு ஐரோப்பிய நாட்டில் நடத்துவதற்கு இலங்கை அரசு தயா ராக இருக்கிறது.

அதற்கான பிரதிபலிப்பை புலிகளிடம் இருந்து தாம் எதிர்பார்த்திருக் கின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துத் தமது அமைச்சரவைச் சகாக்களுக்கு தெரிவித் திருக்கின்றார்.
வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்னிரவு சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்றது.
அப்போதே மேற்படி தகவலை ஜனாதி பதிஇ ஏனைய அமைச்சர்களுக்குத் தெரிவித்தார்.
ஆசிய நாடு ஒன்றில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டை அரசுத் தலைமை தளர்த்திக் கொண்டுள்ளது. ஆனாலும் புலிகளின் கோரிக் கையான நோர்வேயில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டுக்கு அரசுத் தரப்பு இணங்க மறுப்பதாகத் தெரிகின்றது.
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவுக் குப் பதிலாக சுவிட்ஸர்லாந்து போன்ற வேறு ஒரு நாட்டில் பேச்சை நடத்தலாம் என்று அர சுத் தரப்பு இப்போது ஆலோசிப்பதாகவும்
இது தொடர்பாகப் புலிகளுக்கு அரசுத் தரப்பால் கோடிகாட்டப்பட்டிருப்பதாகவும்
புலிகளின் பிரதிபலிப்பை அரசுத் தலைமை எதிப்பார்த்துக் காத்திருப்பதாகவும்
அரசு உயர்மட்டத்துடன் தொடர்புடைய சில வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
இதே கருத்தையே நேற்று அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருக்கின்றார் எனத் தெரிய வந்தது.

லங்காசிறீ
Reply


Messages In This Thread
அமைதிப் பேச்சுகளை நோர்வே தவிர்ந்த - by நர்மதா - 01-05-2006, 10:55 AM
[No subject] - by நர்மதா - 01-05-2006, 10:56 AM
[No subject] - by நர்மதா - 01-05-2006, 10:58 AM
[No subject] - by Birundan - 01-05-2006, 11:07 AM
[No subject] - by அருவி - 01-05-2006, 11:12 AM
[No subject] - by நர்மதா - 01-05-2006, 06:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)