12-27-2003, 02:01 PM
<b>குறுக்குவழிகள்-22</b>
<b>Drag And Drop</b>
வின்டோஸ், மக்கின்டொஸ் ஒப்பரேட்டிங் சிஸ்டம்களில் உள்ள இழு & போடு வசதி எமக்கு ஒரு வரப்பிரசாதமாகும். வழமையாக இது வின்டோஸ் எக்ஸ்புளோரரின் வலது பக்க பாளத்திலிருந்து ஒரு வ்பைலை கொப்பி பண்ணுவதற்காகவோ அல்லது இடமாற்றுவதற்காக இழுத்து இடது பக்கம் உள்ள ஒரு கோப்பில் போடப்படுகிறது. இது ஒரு விதியல்ல: நடைமுறை. வலது பக்க பாளத்திற்குள்ளேயே ஒரு வ்பைலை இழுத்து இன்னொரு வ்போல்டருக்குள் போடலாம்.
ஓரு வ்பைலை ஒரு ட்றைவிலிருந்து இழுத்து இன்னொரு ட்றைவில் உள்ள வ்போல்டருக்குள் போடும்போது அது கொப்பி மாத்திரம் பண்ணப்படும்: ஒறிஜினல் அப்படியே விடப்படும். இக்காரியம் ஒரே ட்றைவினுள் செய்யப்படுமானால் வ்பைல் அகற்றப்பட்டு புதிய இடத்தில் போடப்படுகிறது. ஆனால் கொன்றோல் கீயை அழுத்தி பிடித்துக்கொண்டு இழுத்தால் இங்கும் ஒறிஜினல் அகற்றப்பட்டாது அப்படியே விடப்படும்.
இந்த நடைமுறை வ்பைகளுக்கு மாத்திரம் அல்ல. வேட்டில் உள்ள ஏதாவது ஒரு பந்தியில் ஒரு சொல்லை இழுத்து போடும்போதும் இதே நடைமுறைதான். அதாவது ஒரு சொல்லை இழுத்து போடும்போதும் கொன்றோலை அழுத்தி பிடித்துக்கொண்டு இழுத்தால் அச்சொல்லின் பிரதிதான் புதிய இடத்தில் விழும்; அச்சொல் அங்கேயே விடப்படும்.
பாதியளவு திறந்துள்ள இரண்டு வேட் சட்டங்களுக்கிடையிலும் இதை நடைமுறைப்படுத்தலாம். படங்களையும் இதேபோல் கொன்றோலை அழுத்திபிடித்து இழுத்து பிரதி பண்ணலாம்: டெஸ்க்ரொப்பிற்கும் இழுத்து போடலாம். எக்செல்லிலும் டேட்டா கலத்தை அதன் தலையில் பிடித்து இழுத்து இன்னொரு கலத்தில் பிரதி பண்ணலாம்.