01-04-2006, 04:18 PM
<b>ஐந்து மாணவர்களின்
கொடூரக் கொலையால்
திருமலை ஸ்தம்பிதம்
எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பீதி</b>
திருகோணமலையில் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டும், இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் தமிழர் தாயகத்தின் தலைநகரில் பெரும் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் திருகோணமலை முற்றாக ஸ்தம்பித்துள்ளது. அங்கு காலவரையறையற்ற ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பீதி அங்கு நிலவுகின்றது.
நேற்றுமுன்தினம் இரவு 7.20 மணியள வில் திருகோணமலை பெரிய கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் உள்ள நீண்ட கட்டில் இளைஞர் குழுவொன்று வழமைபோல அமர்ந் திருந்து உரையாடிக் கொண்டிருந்தது. அப் போது ஓட்டோ ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இந்த இளைஞர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டு கோட்டை வீதிப்பக்கமா கைக்குண்டு வெடித்ததில் திருமலை புனித ஜோசப் கல்லூரி மாணவரான யோகராஜா பூங்குழலோன் என்பவரின் காலில் காயம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல சக மாணவர்கள் முயன்றபோது அச்சமயம் அப் பகுதியில் நின்ற கடற்படையினர் அங்கு சுமார் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் கடற்கரையில் ஓய்வுக்காக வந்து அமர்ந்திருந்தோர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதற்கிடையில் காயமடைந்த மாணவர்க ளுக்கு அருகில் விரைந்த கடற்படையினர் அவர்களைத் தாக்கி நிலத்தில் வீழ்த்தி, குண்டு வீசியவர் யாரென்று விசாரித்துள்ளனர். இதுபற்றி எதுவும் தெரியாதென மாணவர்கள் கூறியபோது அதனை ஏற்காத கடற்படையி னர் கீழே விழுந்து கிடந்த மாணவர்களின் நெஞ்சை தமது சப்பாத்துக்கால்களினால் மிதித்தவாறு மாணவர்களின் காதுக்கருகில் துப்பாக்கி முனையை வைத்து சுடத் தொடங் கினர் என்று கூறப்படுகின்றது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சண்முகராஜா கஜேந்திரன் (மருத்துவ பீடத்திற்கு தெரி வானவர்), தங்கத்துரை சர்வானந்தா(மொரட் டுவைப் பல்கலைக்கழக மாணவன்), யோகராஜா ஹேமச்சந்திர, மனோகரன் ரஜீகரன், லோகிதராஜா ரொஹான் ஆகிய ஐவருமே கொல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களான பரராஜசிங்கம் கோகுலராஜ், யோகராஜா பூங்குழலோன் ஆகி யோர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். பூங்குழலோன் நேற்று மாலையளவில் ஆபத்தான கட்டத்தில் இருந்தார். அதேவேளை, கோகுல் ராஜ் அவசர விபத்துப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொல்லப்பட்ட மாணவர்கள் அனைவரின தும் தலையில் சூட்டுக்காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப் புக்குழுவின் திருமலைக் கிளையின் அதிகாரி கள் மாணவர்களின் சடலங்களைப் பார்வையிட்டு இதனை உறுதி செய்திருக்கின்றனர்.
பதற்றநிலை
தமிழர் தாயகத்தின் தலைநகரில் இடம் பெற்ற இந்தச் சம்பவம் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி யிருக்கிறது. இந்தச் செய்தி நேற்றுக்காலை ஊடகங்கள் ஊடாக வெளிவந்ததையடுத்து திருமலை நகரமே ஸ்தம்பிதமடைந்தது. மக் களின் இயல்பு வாழ்வு முற்றுமுழுதாக முடங் கியது. அரச அலுவலகங்கள், வங்கிகள், நீதி மன்றங்கள் போன்றனவும் இயங்கவில்லை.
இதற்கிடையில் கொல்லப்பட்ட மாணவர் களின் சடலங்களை பொறுப்பேற்பதாயின் அவர் கள் "பயங்கரவாதிகள்' என்று கையொப்ப மிட்டு ஏற்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோரை வலியுறுத்தினர் எனவும் ஒரு செய்தி தெரிவித் தது.
ஐந்து மாணவர்களின் சடலங்களும் நேற் றுப் பிரேத பரிசோதனையின் பின் பெற்றோரி டம் ஒப்படைக்கப்பட்டன. துப்பாக்கி மற்றும் குண்டுவெடிப்புகளினால் ஏற்பட்ட மரணங் களை பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
மாணவர்களின் இறுதிக்கிரியைகள் பெரும்பாலும் நாளை வியாழக்கிழமை திரு மலையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது. அதற்கு முன்னதாக அச்சடலங்கள் திருகோணமலையிலுள்ள பிலபலமான கல் லூரிகளுக்கு அஞ்சலி நிகழ்வுகளுக்காக எடுத் துச் செல்லப்படுமென எதிர்பார்க்கப்படு கிறது. (க3)
<b>தகவல்: உதயன் நாளிதள்</b>

[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI