Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதுவருட வாழ்த்து சொன்னவருக்கு நேர்ந்த கதி
#1
படையினர் ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறியவர் வீதியோரம் முழந்தாளில் நிற்க நேர்ந்தது. இந்தச் சம்பவம் புத்தாண்டு தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
திருநெல்வேலிப் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த படையினருக்கு புதுவருட வாழ்த்துக் கூற அந்த வீதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் விரும்பினார். நடந்துவந்துகொண்டிருந்த படையினரில் ஒருவரை அணுகிய அவர் மேற்கத்தைய பாணியில் கைலõகு கொடுத்து ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்தார்.
பதிலுக்கு கைலாகு கொடுத்த சிப்பாய் அடுத்த வினாடியே இந்தக் கைதானே எங்கள் மீது குண்டு எறிகின்றது என்று கூறி வாழ்த்துத் தெரிவித்த நபரை வீதியோரம் முழந்தாளில் நிற்குமாறு பணித்தார்.
தாம் ரோந்து சென்று திரும்பும்வரை அந்த இடத்தைவிட்டு விலகக்கூடாது என்றும் அந்த நபரிடம் சிப்பாய் கூறியுள்ளார்.
படையினருக்குப் புதுவருட வாழ்த்துக் கூறும் தனது ஆசையை தானே நொந்து கொண்ட அந்த நபர் பின்னர் அங்கிருந்து எழுந்து சென்றார்.


நன்றி உதயன்
இச்செய்தியின் இணைப்பு
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Messages In This Thread
புதுவருட வாழ்த்து சொன்னவருக்கு நேர்ந்த கதி - by அருவி - 01-04-2006, 11:16 AM
[No subject] - by Luckyluke - 01-04-2006, 11:21 AM
[No subject] - by ப்ரியசகி - 01-04-2006, 12:33 PM
[No subject] - by Luckyluke - 01-04-2006, 12:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)