Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது கலி காலமா அல்லது கழிவுகள் காலமா...?!
#1
இது கலி காலம்: கழிப்பறையில் வீசப்பட்டது சிசு: தாய்க்கு வயது 15!!!

சேலம்:

சேலம் அருகே கிச்சிப்பாளையம் என்ற இடத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு கழிப்பறையில் வீசப்பட்டது. அந்தக் குழந்தையின் தாய்க்கு வயது 15 தான் ஆகிறது என்ற தகவல் போலீஸாரையும் அப் பகுதியினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கிச்சிலிப்பாளையம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அப்பகுதியில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது, அங்கு அழகான ஆண் சிசு கிடப்பதைப் பார்த்த அதிர்ந்தனர்.

தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல், பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருந்ததால், உடலெங்கும் ரத்தமும் ஈரமுமாய் அந்த சிசு பரிதாபமாய் கதறிக் கொண்டிருந்தது.

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது 15 வயதான சிறுமி பிடிபடடாள். அச் சிறுமி தான் குழந்தையின் தாய் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தபோது அப் பகுதியினர் மட்டுமின்றி போலீசாரும் அதிர்ந்து போய்விட்டனர்.

தவறான முறையில் குழந்தை உருவானதால் அதை கழிப்பறையில் வீசி விட்டதாக அச் சிறுமி அழுது கொண்டே கூற அவளைத் திட்டுவதா, தேற்றுவதா என்று தெரியாமல் போலீசார் கலங்கி நின்றனர்.

பின்னர்அந்த 15 வயது 'தாயை' போலீஸார் கைது செய்தனர்.

thatstamil.com
---------------

இது தமிழ்நாட்டில் தானே என்று இருந்துவிட முடியாது...அண்மையில் யாழ் அச்சுவேலிப் பகுதியில் சட்டவிரோத கருக்கலைப்பின் போது 32 வயது உள்ள இரண்டு பிள்ளைகளின் தாய் இறந்தார்....இவருக்கு கருக்கலைப்புச் செய்த மருத்துவர் பின்னர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடை பெறுகின்றன....!

கரு உருவாவதற்கான காரணிகளை தேவைகளை அகற்றினால் கருக்கலைப்பும் சிசுக் கொலையும் அநாதைச் சிசுக்களின் பெருக்கமும் கட்டுப்படுத்தப்படும்...இலங்கை இந்தியா போன்ற வறிய நாடுகளிலும் மேற்கில் போல் பிள்ளைகளை அரசுகள் பெறுப்பேற்று வளர்க்க முடியுமா என்ன....?! எனவே காரண கர்த்தாக்கள் கொஞ்சம் சிந்தியுங்கள் அல்லது சட்டம் போட்டு மனங்களைப் பூட்ட வேண்டியதுதான் ஒரே வழி...அதற்கு ஆட்சியில் இருப்பவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டுமே...சினிமா நடிகைகள் எல்லாம் அரசாண்டால்....சமூக வாழ்வியல் என்னாவது....????!
இப்படித்தான் ஆகும்....!

:evil: :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இது கலி காலமா அல்லது க - by kuruvikal - 12-25-2003, 01:22 PM
[No subject] - by pepsi - 12-28-2003, 01:28 AM
[No subject] - by kuruvikal - 12-28-2003, 11:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)