01-04-2006, 09:18 AM
<b>திருமலையில் 5 மாணவர்களின் மரணங்களுக்கும் குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூட்டுக் காயங்களுமே காரணம் பிரேத பரிசோதனையில் முடிவு.</b>
திருக்கோணமலையில் இடம்பெற்ற ஐந்து மாணவாகளின் மரணங்களுக்கு குண்டு வெடிப்பும்,துப்பாக்கி சூட்டுக காயங்களுமே காரணம் என பிரேத பரிசோதனையின் முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருக்கோணமலையில் நேற்றிரவு எட்டு மணியளவில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது குண்டு வீச்சு தாக்குதலும் பின்னர் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. கடற்படையினரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.எனினும் படையினரை இலக்கு வைத்து எடுத்து வரப்பட்ட குண்டு வெடித்தமை காரணமாகவே மாணவர்கள் மரணமானதாக படைத்தரப்பு தெரிவித்திருந்தது. துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் படைத்தரப்பால் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட மரணமான ஐந்து மாணவாகளின் பிரேத பரிசோதனையின் போது குண்டு வெடிப்பும், துப்பாக்கி சூட்டுக்காரணமாகவே மரணங்கள் சம்பவத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை பிரேத பரிசோதனையின் பின்னர் திருக்கோணமலை வைத்தியசாலையில் இருந்து ஐந்து மாணவர்களின் சடலங்களும் உறவினர்களால் அவர்களின் இல்லங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. திருக்கோணமலை தமிழ் மக்கள் பேரவை ஒரு அவசர சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்திருக்கிறது. இதில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களினதும் இறுதி கிரியைகள் தீர்மானம் எடுக்கப்படவுள்ளன.
பெருமபாலும் ஐந்து மாணவாகளினதும் உடலங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை நகரின் கல்லூரிகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் தியாகிகள் அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் தீர்மானம் இங்கு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
<b>தகவல் மூலம்- நிதர்சனம்.கொம்</b>

"
"
"