01-04-2006, 09:10 AM
திருகோணமலையில் கடந்த திங்கட்கிழமை இரவு படையினரின் கைக்குண்டு வீச்சிலும், கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த ஐந்து தமிழ் இளைஞர்களினதும் இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை இடம்பெறும் என தெரியவருகின்றது.
இது தொடர்பான ஏற்பாடுகளில் திருமலை தமிழ் மாணவர் பேரவையினர் ஈடுபட்டுவருவதாக அறியமுடிகின்றது.
இதே நேரம் இச்சம்பவங்களை கண்டித்து திருமலையில் இன்று முதல் இடம்பெறும் வழமை மறுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அதே சமயம் மேற்படி இளைஞர்களின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை பொது மக்கள் கலந்துகொள்வதற்காக வழமை மறுப்புப் போராட்டம் தளர்த்தப்படும் எனவும் தெரியவருகின்றது.
தகவல் மூலம் - சங்கதி

"
"
"