Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்:
#1
<b>மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: ஒரு போராளி உட்பட இருவர் உயிரிழந்தனர்!</b>

மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை போராளி ஜெயானந்தன் மற்றும் வினோத் என்ற பொதுமகன் உயிரிழந்துள்ளனர் என்று தமிழ்நெட் செய்தி தெரிவிக்கிறது.


மன்னாரில் விடுதலைப் புலிகளின் முள்ளிக்குளம் பகுதி வழையங்காட்டுப் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் நுழைந்து சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

உயிரிழந்த போராளி ஜெயானந்தன்இ ஏற்கனவே தனது ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் விடுத்த செய்திக்குறிப்பு:

தமிழீழ விடுதலைப் புலிகளின் வவுனியா மேற்கு பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் மேஜர் ஜெயானந்தன் இன்று (03.01.2006) சிறிலங்கா இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகிய வவுனியாஇ வலையன்கட்டு- முள்ளிக்குளம் வீதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவித் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பத்தில் இவருடன் கூடப்பணித்த இவரது உதவியாளராகிய நாட்டுப்பற்றாளர் தேவராசா வினோதன் என்பவரும் வீரச்சாவடைந்துள்ளார்


தகவல்: புதினம்
[size=14] ' '
Reply


Messages In This Thread
மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: - by தூயவன் - 01-03-2006, 04:30 PM
[No subject] - by ஊமை - 01-03-2006, 06:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)