01-03-2006, 10:27 AM
நேற்று(02-01-2006) நண்பகல் பலாலி வீதியில் காவல் கடமையில் நின்ற இராணுவத்தினர் முன்னிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் சுருட்டிய பேப்பர் கட்டு ஒன்றை தவற விட்டுச் சென்றார்கள் இதனை வழிப்போக்கர்கள் எவரும் எடுக்க முன்வரவில்லை. இராணுவத்தினருக்கு முன்னால் கிடந்தமையால் அதனையிட்டுப் பொது மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாது சென்றார்கள் குறிப்பிட்ட சில நிமிடங்களாக இராணுவத்தினரும் அக்கறை காட்டாது இருந்தார்கள். விட்டுச் சென்றவர்கள் திரும்பி வருவார்கள் என நினைத்த இராணுவத்தினர் அதனை குறிப்பிட்ட நேர இடைவெளியின் பின்னர் வீதியால் வந்த வயோதிபரை மறித்து அதனை எடுத்து விரிக்கும் படி கூறினார்கள் அதனை எடுத்து விரித்துப்பார்த்த போது அதனுள் மக்கள் படையினரால் வெளியிடப்பட்ட சிங்கள் மொழியிலான இராணுவத்தினருக்கான துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டன. இராணுவத்தினரை யாழ்குடாநாட்டில் இருந்து வெளியேறும்படியும் உங்களின் உயிர்களைக் காத்துக்கொள்ளுங்கள் என்ற துண்டுப் பிரசுரமே காணப்பட்டதாகும் இதனால் இராணுவத்தினரிடையே பலத்த குழப்பமான நிலைமை காணப்பட்டதாக கூறப்படுகின்றது இந்தச் சம்பவம் திருநெல்வேலி பலாலி வீதி தபால் கட்டைச் சந்திக்கு அருகாமையில் இன்று இடம்பெற்றது.
நிதர்சனம்
நிதர்சனம்

