01-03-2006, 08:49 AM
MUGATHTHAR Wrote:<span style='color:blue'>சாத்திரி : முகத்தான் உன்ரை தொழில் விசயம் கேக்கப்பிடாதுதான் இருந்தாலும் இந்த பெம்பிளை போய் பாக்கிறது எல்லாம் இந்தக்காலத்துக்கு சரியோ?
..
சாத்திரி : இல்லையடா கண்காட்சி மாதிரி வீட்டிலை போய் பெண்ணு பாக்கிறது எனக்கெண்டா சரியாப் படேலை நாலு பகுதி இப்பிடி வந்து பாத்திட்டு வேண்டாம் எண்டு போனால் அந்தப் பிள்ளைக்குத்தானே ஊருக்கை அவமானம்
..
சாத்திரி : ... பெம்பிளைப் பிள்ளைக்கு ஏற்படுகிற மனத்தாக்கத்தை
முகத்தான் : சாத்திரி இது சரிதான் அனேகமா படத்தைக்காட்டி ஒரளவுக்கு ஒத்து வந்தா பிறகுதான் வீட்டை கூட்டிட்டுப் போறது இனி வீட்டுக்குப் போணா வீடு வாசல்களை பாத்தமாதிரியும் கிடக்கும்தானே
சின்னப்பு : பின்னை சீதனம் வேண்டுற சனங்கள் அதுகளைப் பாக்கிறதிலைதான் குறியா இருப்பினம் கண்டியோ?
....
முகத்தான் : அது உண்மைதான் இதுக்கு பெடியளைப் பெத்த சனம் யோசிச்சு திருந்தினால் தான் இதை நிப்பாட்ட ஏலும் நாங்கள் தொழிக்காண்டி கண்டுக்காமல் இருந்திடுவம்
சாத்திரி : அந்தக் காலத்திலை பெம்பிளையள் வெளிக்கிட்டுத் திரியிறேலை அதாலை இப்பிடியொரு சமாச்சாரத்தை உருவாக்ககிச்சினம் இப்பதானே வேலை எண்டு பெண்கள் வெளியிலை வந்திட்டாங்கள் ஆனபடியா இது தேவையில்லாத ஒண்டு;
.........
சாத்திரி : இல்லை சின்னப்பு என்ரை வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு பெம்பிளை 5 6 பகுதி வந்து பாத்திட்டுப் போய் ஒரு முடீவும் சொல்லேலை பிள்ளையை பாக்கப் பாவமாக் கிடக்கு அதுதான் ஞாபகம் வர கதையைத் தொடக்கினனான்
...</span>
முகத்தார் நன்றாக எழுதுகிறீர்கள், வாழைப்பழத்தில ஊசி ஏற்றுவது போல் என்று சொல்வார்கள் அதைப்போல் நகைச்சுவையுடன் சமூகத்தில் ஏற்படவேண்டிய மாற்றங்களை உங்களின் தொடர்களில் எழுதி வருகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
சமூகம் தானா அறிந்து திருந்தினாலே ஒழிய இதைத்திருத்தமுடியாது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.


