01-03-2006, 06:00 AM
<b><span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு - அங்கம் - 15</b></span>
<i>(இந்த முறை புது வருஷத்துக்கு பார்ட்டி வைக்கிறதெண்டு; சொல்லி சின்னப்புவையும்; சாத்திரியையும்; வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார் முகத்தார் காலேலையே மாக்கெட்டுக்குப் போய் ஆட்டு இறைச்சியை வாங்கிட்டு வந்தார் நேற்றே போத்தில் எடுத்து வைச்சபடியால் பிரச்சனையில்லை )</i>
முகத்தார் : இஞ்சரும் இவங்கள் 2பேரையும் சாப்பிட வரச் சொல்லியிருக்கிறன் இதிலை 2கிலோ ஆட்டுறைச்சியிருக்கு காணுமே
பொண்ணம்மா : எப்ப புது வருஷம் வருமெண்டு பாத்துக் கொண்டிருந்தனீங்களே என்னைக் கொல்லுறத்துக்கு. இனி உங்கடை கூட்டத்துக்கும் ஓசியெண்டா பாஞ்சு வருங்கள்
முகத்தார் : இஞ்சை அவங்களைத் திட்டாதையும் நான்தான் கூப்பிட்டனான் இதிலை கத்தரிக்காயும் இருக்கு வேறை என்ன வேணும்
பொண்ணம்மா : பெரிய றோயல் விருந்து மாதிரி நிக்கிறீயள் அதுகளுக்கு தண்ணியை வாங்கிக் குடுத்து அதாலையே கலைச்சு விடுகிறதுக்கு வீட்டையெல்லாம் கூட்டி வாறீயள்
முகத்தார் : என்னப்பா எந்த நாளுமே புதுவருஷம் பிறக்கேக்கை ஒரு சந்தோஷம் தானே
பொண்ணம்மா : இப்பிடியே எல்லா பெருநாளுகளையும் சொல்லிப் போடுங்கோ சரி சரி உங்களை கட்டின தலைவிதி மாரடிக்கத் தானே வேணும்;
(சைக்கிள் மணியடிச்சபடி சின்னப்புவும் சாத்திரியும் டபிள்ஸில் வந்து இறங்கிறார்கள்)
பொண்ணம்மா: இஞ்சை பாருங்கோவன் எப்ப விடியுமென இருந்திட்டு முகமும் கழுவாமல் வாற வடிவை
முகத்தார் : மெல்லமா சொல்லடி அவங்களுக்கு கேக்கப் போகுது இண்டைக்கு மட்டும் ஒரு நாள் பொறுத்துக்கொள்
பொண்ணம்மா : உந்த போத்தில் கறுமாந்திரங்கள் ஒண்டையும் வீட்டுக்கை கொண்டு வந்திடைதைங்கோ வெளியிலை மா மரத்துக்கு கீழை இருந்து கூத்தடியுங்கோ பிறகு வீடெல்லாம் கழுவ என்னாலை ஏலாது
முகத்தார் : சரி சரி சாத்திரி சின்னப்பு நான் ரெடி எல்லாம் வாங்கியாச்சு உந்த மரத்துக்கு கீழை குந்துவம் என்ன
சாத்திரி : ஏன் மனுசிக்காரி வெளியிலை கலைச்சுப் போட்டாவோ
முகத்தார் : சீ சீ வெளிலை காத்துப்பட்டா இன்னும் கொஞ்சம் தூக்கும்தானே
(போத்தல் சோடா கிளாஸ் என சாத்திரியிட்டை குடுக்கிறார் சாத்திரியும் கிளாசைக் கழுவி ரெடியாகிறார் )
முகத்தார் : இஞ்சை பார் கூத்தை சின்னப்பு அரைக்கிளாஸ் அடிக்கேலை தடுமாறுது
சின்னப்பு : ரேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா இருந்தாலும் கிக்கா இருக்கு
சாத்திரி :எட நாசமா போண சின்னப்பு கிளாஸ் கழுவின தண்ணியை குடிச்சுப்போட்டே இந்த பிலிம் காட்டுறாய் இந்தா இதைக் குடி
சின்னப்பு : முகத்தான் தொட்டுக்கிறதுக்கு ஓண்டையும் காணேலை
முகத்தார் : ஏன் சின்னாச்சியை கூட்டியந்திருக்கலாமே கொஞ்சம் பொறு இறைச்சி இறக்கினவுடனை எடுத்து வாறன்
சின்னப்பு : முகத்தான் நீ இருக்கனும் நான் சாகனும் இப்பிடி என்னை கூப்பிட்டு இருத்தி வைச்சு தண்ணி ஊத்தித் தாறதுக்கு நீ நல்லா இருப்பாய்
சாத்திரி :முகத்தான் ஆளுக்கு பட்டுட்டுது கண்டுக்காதை... அது சரி 2 நாளைக்கு முன்னம் வந்தன் வீட்டிலை இல்லை எங்கை போனனீ?
முகத்தார் : ஓ பின்னேரம் என்ன.. . . ஒரு பகுதி கலியாணம் பெம்பிளை பாக்கக் கூட்டிக் கொண்டு போனனான்
சாத்திரி : முகத்தான் உன்ரை தொழில் விசயம் கேக்கப்பிடாதுதான் இருந்தாலும் இந்த பெம்பிளை போய் பாக்கிறது எல்லாம் இந்தக்காலத்துக்கு சரியோ?
முகத்தார் : நான் கோயிலைதான் ஒழுங்கு பண்ணுறனான்; ஒருமுறை கோயிலை பெம்பிளை பாக்க வந்து பெடி வேறையொண்டைக் கண்டுட்டு அதைப் பேசச் சொல்லி பிரச்சனை வந்தாப் பிறகுதான் இப்ப வீட்டுக்கு கூட்டிப்போறது
சாத்திரி : இல்லையடா கண்காட்சி மாதிரி வீட்டிலை போய் பெண்ணு பாக்கிறது எனக்கெண்டா சரியாப் படேலை நாலு பகுதி இப்பிடி வந்து பாத்திட்டு வேண்டாம் எண்டு போனால் அந்தப் பிள்ளைக்குத்தானே ஊருக்கை அவமானம்
சின்னப்பு : இஞ்சை வீட்டிலை போய் நாலு பலகாரத்தைத் திண்டு பெண்ணு பாக்கிறது எவ்வளவு சந்தோஷம் கண்டியோ இது சாத்திரிக்குத் தெரியேலை
சாத்திரி : எங்கை போனாலும் தின்னுறதிலையே குறியா இரு நான் சொல்லுறது பெம்பிளைப் பிள்ளைக்கு ஏற்படுகிற மனத்தாக்கத்தை
முகத்தான் : சாத்திரி இது சரிதான் அனேகமா படத்தைக்காட்டி ஒரளவுக்கு ஒத்து வந்தா பிறகுதான் வீட்டை கூட்டிட்டுப் போறது இனி வீட்டுக்குப் போணா வீடு வாசல்களை பாத்தமாதிரியும் கிடக்கும்தானே
சின்னப்பு : பின்னை சீதனம் வேண்டுற சனங்கள் அதுகளைப் பாக்கிறதிலைதான் குறியா இருப்பினம் கண்டியோ?
சாத்திரி : மற்றது முகத்தான் பெண்ணுபாக்க வாறம் எண்டு போட்டு போனால் பெம்பிளையை நல்ல மேக்கப் போட்டு வெளிக்கிடுத்திவிடுவாங்கள் இல்லையோ இதாலை பெடிப்பிள்ளையளுக்கும் கஷ்டம்தானே
சின்னப்பு : நான் சின்னாச்சியை பாக்கபோணது எப்பிடித் தெரியுமே காலேலை கிடுகு இருக்கோ எண்டு கேட்டுக் கொண்டு கூட்டாளியோடை போனன் அப்ப மேக்கப்புகள் இல்லாமல் வடிவாத்தான் இருந்தாள் ஓம் எண்டு கலியாணத்துக்கு சரி சொல்லிட்டன் பிறகுதான் தெரிஞ்சுது நான் பாத்தது சின்னாச்சின்ரை அம்மாவை எண்டு . . .
முகத்தார் : இது என்ன என்ரை கூத்தைக் கேளன் பெண்ணு பாக்கப் போட்டம் அம்மா சொன்ன டேய் குசினியைப் போய் பாத்திட்டு வந்தா பெம்பிளையின்ரை லட்சணம் தெரியும் எண்டு வீட்டைச் சுத்திப் பாக்கிற சாக்கிலை போய் பாத்தம் எல்லாம் அந்த மாதிரி அடுக்கி வலு கிளிணா இருந்திச்சு எனக்கும் அம்மாக்கும் வலு சந்தோஷம்
சாத்திரி : பிறகென்ன குடுத்து வைச்சஆள் எண்டு சொல்லு
முகத்தான் : நீ வேறை பிறகு தான் தெரிஞ்சுது அவங்கள் குசினிலை சமைக்கிறதே இல்லையாம் கடைதானாம் சாப்பாடு
சாத்திரி : சரி இந்த முறையெல்லாம் அந்தக்காலத்துக்குச் சரி இப்ப இதுகள் தேவை இல்லை எண்டுதான் நான் சொல்லுறன்
முகத்தான் : அது உண்மைதான் இதுக்கு பெடியளைப் பெத்த சனம் யோசிச்சு திருந்தினால் தான் இதை நிப்பாட்ட ஏலும் நாங்கள் தொழிக்காண்டி கண்டுக்காமல் இருந்திடுவம்
சாத்திரி : அந்தக் காலத்திலை பெம்பிளையள் வெளிக்கிட்டுத் திரியிறேலை அதாலை இப்பிடியொரு சமாச்சாரத்தை உருவாக்ககிச்சினம் இப்பதானே வேலை எண்டு பெண்கள் வெளியிலை வந்திட்டாங்கள் ஆனபடியா இது தேவையில்லாத ஒண்டு;
சின்னப்பு : சாத்திரிக்கு இண்டைக்கு என்ன நடந்தது முகத்தான் நாலு இடத்தை போய் வாய் நனைக்கிறது வயிறு எரியுதுபோல
சாத்திரி : இல்லை சின்னப்பு என்ரை வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு பெம்பிளை 5 6 பகுதி வந்து பாத்திட்டுப் போய் ஒரு முடீவும் சொல்லேலை பி;ள்ளையை பாக்கப் பாவமாக் கிடக்கு அதுதான் ஞாபகம் வர கதையைத் தொடக்கினனான்
முகத்தார் : இப்ப வெளிநாட்டுக்கு பேசி முடிச்சுப் போற பிள்ளையளை பெடியங்கள் படத்திலை பாத்து ஓகே சொல்லித்தானே போகுதுகள் இது இஞ்சை இருக்கிற சில கேஸ்சுகள் மாறாமல் எங்கடை உயிரையும் சேர்த்தெடுக்குதுகள்
சின்னப்பு : சாத்திரி இதுக்கு நீ போய் மண்டையை உடைக்காதை இண்டைக்கு வந்த அலுவலைப்பாப்பம் முகத்தான் இனி இருக்கேலாது பசி வயித்தை கிள்ளுது ஒருக்கா சாப்பாடு முடிஞ்சுதோ எண்டு எட்டிப் பார். . ..

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>