Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவத்தினர் மீது 2 பெண்கள் பாலியல் வல்லுறவு முறைப்பாடு
#2
<b>சிறிலங்கா இராணுவத்தினர் மீது 2 பெண்கள் பாலியல் வல்லுறவு முறைப்பாடு </b>
[செவ்வாய்க்கிழமை, 3 சனவரி 2006, 00:29 ஈழம்] [ம.சேரமான்]
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த 2 பெண்கள், சிறிலங்கா அரச படையினர் மீது பாலியல் வல்லுறவு முறைப்பாட்டை சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பதிவு செய்துள்ளனர்.


பருத்தித்துறையிலிருந்து தென்கிழக்கில் 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மலுசந்தி கிராமத்தைச் சேர்ந்த இரு பெண்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு சிறிலங்கா இராணுவத்தினர் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் விசாரணைகளை இராணுவத்தினர் நடத்திக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் உள்ளே நுழைந்த படையினர் இந்த வன்செயலில் ஈடுபட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா படையினரால் மேலும் தாங்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகாத வகையில் உரிய பாதுகாப்புகள் அளிக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினரின் கைது மற்றும் தேடுதல் நடவடிக்கையால் பெண்கள் காணாமல் போவதும், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுவதும் அதிகரித்து வருவதாக யாழ். மக்கள் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

கடந்த சில வாரங்களாக இராணுவத்தினர் மீதான பாலியல் வல்லுறவு முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி:புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 01-02-2006, 08:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)