Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சதாம் கைதுக்குப்பின்.. ஆய்வு
#55
எப்படி இருக்கு அமெரிக்காவின் சுத்துமாத்து விளையாட்டு....இதுதான் சன நாயகம்...பிரச்சாரம்...பேச்சுரிமை....ஏதோ பிரிட்டன் கொஞ்சம் பரவாயில்லை....!
--------------------------------

டிசம்பர் 22, 2003

உணவில் மயக்க மருந்து கலந்து பிடிக்கப்பட்ட சதாம்

பாக்தாக்:

சதாம் ஹூசேனை அமெரிக்கப் படைகள் பிடிக்கவில்லை என்றும், குர்து இன பழங்குடியினர் தான் பிடித்து அமெரிக்கப் படைகளிடம் ஒப்படைத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


லண்டனில் இருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் நாளிதழ், பிரிட்டிஷ் உளவு வட்டாரங்களை சுட்டிக் காட்டி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

சதாம் ஹூசேனின் ஆட்சி காலத்தில் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட குர்து இனத்தினரின் படைகள் தான் அவரது இருப்பிடத்தை ஒரு உளவாளி மூலம் அறிந்ததாகவும், இதையடுத்து அவரது உணவில் மயக்க மருந்து கலந்து செயலிழக்க வைத்து அமெரிக்கப் படைகளின் வசம் ஒப்படைத்தாக பிரிட்டிஷ் உளவுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.

சதாமின் சமையல்காரரை மடக்கி உணவில் மயக்க மருந்தை கலந்து சதாமுக்குக் கொடுத்த பின்னரே அவரைப் குர்துப் படைகள் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. நேரடியாக அவரைப் பிடிக்கச் சென்றிருந்தால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்பதால் உணவில் மயக்க மருந்து கலக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சதாமின் இருப்பிடம் குறித்து குர்து இனத்தினருக்குத் தகவல் தந்த உளவாளிக்கு அமெரிக்கா அறிவித்துள்ள ரூ. 150 கோடி பரிசுப் பணம் தரப்படலாம் என்றும் அந்த நாளிதழ் தெரிவிக்கிறது.

அமெரிக்கர் முகத்தில் துப்பிய சதாம்:

அமெரிக்கப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது தன்னைப் பிடித்த அமெரிக்க வீரரின் முகத்திலும் துப்பியுள்ளார் சதாம் என்றும் பிரிட்டிஷ் உளவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந் நிலையில் அமெரிக்கப் பிடியில் உள்ள சதாம் ஹூசேனை சந்தித்துவிட்டு வந்த ஈராக்கின் நிர்வாக கவுன்சின் தலைவர் அஹமத் சலாபி, அமெரிக்காவின் டைம்ஸ் இதழக்கு அளித்துள்ள பேட்டியில்,

கைது நடவடிக்கையின்போது அமெரிக்கப் படை வீரர் ஒருவரின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளார் சதாம். கைதுக்குப் பின் நடந்த விசாரணையில் சரியான முறையான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

இப்போதும் அதிபர் நான்தான் என்றும், அதிபருக்கு உரிய மரியாதையுடன் என்னிடம் நீங்கள் பேச்சுவார்த்தைதான் நடத்த வேண்டுமேயொழிய, விசாரணை நடத்தக் கூடாது என சதாம் கூறினார்.

அவர் திருந்தியதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் அஹமத் சலாபி.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 12-16-2003, 09:15 PM
[No subject] - by Mathivathanan - 12-16-2003, 09:58 PM
[No subject] - by sethu - 12-16-2003, 10:16 PM
[No subject] - by kayanmathi - 12-17-2003, 01:35 AM
[No subject] - by vasisutha - 12-17-2003, 01:59 AM
[No subject] - by Mathivathanan - 12-17-2003, 09:12 AM
[No subject] - by sethu - 12-17-2003, 09:16 AM
[No subject] - by kuruvikal - 12-17-2003, 10:22 AM
[No subject] - by Mathivathanan - 12-17-2003, 10:23 AM
[No subject] - by yarlmohan - 12-17-2003, 10:37 AM
[No subject] - by Mathivathanan - 12-17-2003, 10:39 AM
[No subject] - by yarlmohan - 12-17-2003, 10:45 AM
[No subject] - by kuruvikal - 12-17-2003, 10:52 AM
[No subject] - by Mathivathanan - 12-17-2003, 10:53 AM
[No subject] - by yarlmohan - 12-17-2003, 10:57 AM
[No subject] - by Mathivathanan - 12-17-2003, 11:23 AM
[No subject] - by kuruvikal - 12-17-2003, 11:33 AM
[No subject] - by mohamed - 12-17-2003, 11:46 AM
[No subject] - by Mathivathanan - 12-17-2003, 11:53 AM
[No subject] - by mohamed - 12-17-2003, 12:10 PM
[No subject] - by kayanmathi - 12-17-2003, 01:13 PM
[No subject] - by mohamed - 12-17-2003, 03:46 PM
[No subject] - by Mathivathanan - 12-17-2003, 06:28 PM
[No subject] - by nalayiny - 12-17-2003, 08:27 PM
[No subject] - by nalayiny - 12-17-2003, 08:34 PM
[No subject] - by yarl - 12-17-2003, 09:14 PM
[No subject] - by nalayiny - 12-17-2003, 09:19 PM
[No subject] - by tharma - 12-18-2003, 02:21 AM
[No subject] - by Paranee - 12-18-2003, 09:56 AM
[No subject] - by shanthy - 12-18-2003, 10:20 AM
[No subject] - by shanthy - 12-18-2003, 10:22 AM
[No subject] - by mohamed - 12-18-2003, 12:00 PM
[No subject] - by Selan - 12-18-2003, 01:47 PM
[No subject] - by kuruvikal - 12-18-2003, 02:04 PM
[No subject] - by mohamed - 12-18-2003, 02:04 PM
[No subject] - by kuruvikal - 12-18-2003, 02:18 PM
[No subject] - by mohamed - 12-18-2003, 02:31 PM
[No subject] - by Mathivathanan - 12-18-2003, 02:40 PM
[No subject] - by mohamed - 12-18-2003, 02:49 PM
[No subject] - by mohamed - 12-18-2003, 02:51 PM
[No subject] - by kuruvikal - 12-18-2003, 02:53 PM
[No subject] - by yarl - 12-18-2003, 03:29 PM
[No subject] - by mohamed - 12-18-2003, 03:31 PM
[No subject] - by Paranee - 12-18-2003, 03:35 PM
[No subject] - by mohamed - 12-18-2003, 03:50 PM
[No subject] - by nalayiny - 12-18-2003, 04:50 PM
[No subject] - by nalayiny - 12-18-2003, 04:56 PM
[No subject] - by kuruvikal - 12-18-2003, 05:01 PM
[No subject] - by vasisutha - 12-18-2003, 06:49 PM
[No subject] - by shanmuhi - 12-20-2003, 09:38 PM
[No subject] - by Paranee - 12-21-2003, 05:37 AM
[No subject] - by sethu - 12-21-2003, 09:42 AM
[No subject] - by Mathivathanan - 12-21-2003, 11:03 AM
[No subject] - by kuruvikal - 12-22-2003, 10:20 AM
[No subject] - by TMR - 12-22-2003, 05:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)