Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரசித்த நகைச்சுவை
#14
அமெரிக்க அதிபர் புஸ் ஈராக்கில் உள்ள ரகசிய இடத்தில் உள்ள சிறையில் இருக்கும் சதாமைச் சந்திக்கச் செல்கிறார்.


புஸ்: ஹலோ சதாம் நான் புஸ் வந்திருக்கிறேன்..

சதாம்: இன்சா அல்லா. கான் யு கம் ஹாவ் அன் அவர் லேற்றர். (ஊயn லழர உழஅந hயடக யn hழரச டயவநச?) நான் இப்போது தொழ வேண்டும்..

(அரைமணி நேரத்திற்கு பின்னர் சதாமை சந்திக்கிறார்)

புஸ்: அரை மணிநேரம் தாமதிக்க வைத்துவிட்டாய்?

சதாம்: அதற்குக் காரணம் இருக்கிறது பின்னால் புரியும். ஆனால் அந்த அரை மணி நேரமும் ரைம் பொம் ஒன்றுக்கு மேலே நிற்பது போல் நடுங்கிக்கொண்டு நின்றாயே. இப்போது ஈராக்கில் உனது படை, உனது அதிகாரம். நான் வேறு கைவிலங்கோடு சிறையில்.. இருந்தாலும் நீ ஈராக்கில் நடுங்கிக் கொண்டு நிற்கிறாய்.. வெட்கமாயில்லை? எங்கே பத்திரிகை தொலைக்காட்சிக்காரரைக் காணேலை. ஒரு கமராக்காரர் மட்டும் நிற்கிறார்.

புஸ்: நான் வந்தது யாருக்கும் தெரியாது. திரும்பி அமெரிக்காவிற்கு போய்த்தான் உன்னைச் சந்தித்ததை பெருமையாய் தொலைக்காட்சிக்குக் காட்டவேண்டும்.

சதாம்: வரும்போது விமானத்தின் விளக்குகளை அனைத்துவிட்டு வந்திருப்பாயே?

புஸ்: உனக்கெப்படித் தெரியும்.

சதாம்: போன மாதம் நீ ஈராக்கிற்கு தாங்ஸ்கிவிங் டேக்கு வந்தபோது அப்படித் தானே வந்தாய். பதுங்கிப்பதுங்கி யாருக்கும் தெரியாமல்.. உண்மையில் நீ அன்று எனக்குத் தான் தாங்ஸ் சொல்லியிருக்கவேணும், உன்னை உயிரோடு விட்டதற்கு..

புஸ்: அந்த விஜயம் எனக்கு நல்ல பப்பிளிசிற்றி தெரியுமோ?

சதாம்: பதுங்கி வந்ததிலை பப்ளிசிற்றி வேறு.. அதில் தவறில்லை. நாட்டைக் கொள்ளையடிக்க வந்த திருடன் தானே நீ. பதுங்கிவராமல் எப்படி வருவாய்? இப்ப கூட அப்படித்தான் வந்திருப்பாய்..

சதாம்: விமானத்தின் விளக்குகளை அணைத்து விட்டுத் தான் வந்தோம். சத்தம் கேட்கும் என்று எஞ்சினையும் நிறுத்தும்படி சொன்னேன். ஆனால் எஞ்சின் நின்றால் விமானம் விழுந்துவிடும் என்று பைலட் சொன்னதால் அதனை நிறுத்தவில்லை.

சதாம்: அதுசரி ஏன் வந்தாய் விரைவாய் சொல். நான் குட்டித்து}க்கம் போடவேணும்.

புஸ்: உன்னால் எப்படி நிம்மதியாக து}ங்க முடிகின்றது.

சதாம்: வீரனுக்கு சிறையும் சிம்மாசனம்.. பலவானுக்கு பதுங்கு குழியும் பஞ்சுமெத்தை.

புஸ்: தண்ணீர் குடிக்க மறுக்கிறாயாமே ஏன்?

சதாம்: பெற்றோல் குடிக்கவந்த பேய்கள் ஓழியும் வரை நான் தண்ணீர் குடிப்பதில்லை..

புஸ்: நாங்கள் ஒரு நாயைக் கொல்வதாயினும் தண்ணீர் கொடுத்து விசாரணை வைத்துத்தான் கொல்வோம்.

சதாம்: ஆ! தெரியும். எத்தர்கள் சித்தர்களாக நடிக்க எடுக்கும் வழிகளில் இதுவும் ஒன்று. ஏற்கனவே எழுதப்பட்ட தீர்;ப்புக்கு ஒப்புக்கு ஒரு விசாரணை.. நன்று நன்று..

புஸ்: எப்படியும் கடைசியாய் உன்னைக் கண்டுபிடித்து விட்டோம் பார்த்தாயா?

சதாம்: நீ தேடிவந்தது என்னையா, பேரழிவு ஆயுதத்தையா? எனக்கு நன்கு தெரியும் நீ தேடிவந்தது என்னையல்லவென்று.

புஸ்: உன்னிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லையென்று எனக்கு எப்போதோ தெரியும். உலகிற்கே அதை சப்ளை செய்வதே நாங்கள் தானே. நாங்கள் உனக்குக் கொடுக்காது எப்படி அது உனக்குக்கிடைக்கும். நான் தேடிவந்தது பேரழிவு ஆயுதங்களையல்ல.. ஆனால் உன்னையும் தேடி வரவில்லை.

சதாம்: தெரியும்.. நீ என்னைத் தேடி வரவில்லை. நீ எண்ணையைத் தேடிவந்தாய்.

புஸ்: பேசாமல் எண்ணையை எம்மிடம் கொடுத்துவிட்டிருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது. எமது ஆயுத பலத்தைப் பார்த்தாயா? நகத்தை வெட்டுவதை போல் உன்னை வெட்டிவிடுவேன்.

சதாம்: நகத்தை விடு. முகத்தைப் பார்த்தாயா? உனது அதிகாரிகள் எனக்கு முகச்சவரம் செய்தார்கள். எனது தாடிமயிரே அவர்களின் ஆயுதத்திற்கு கட்டுப்படவில்லை. மீளவும் வளர்ந்துவிட்டது. கேவலம் உனது ஆயுதத்திற்கு எனது மசிரே அடங்கவில்லை.. நானா அடங்கப்போகிறேன்?

புஸ்: இனி உங்கள் முஸ்லிம்களின் கொட்டம் அடங்கிவிடும்.

சதாம்: ஆ! கட்டிப்போட்டுவிட்டு கனக்கக் கதைக்கிறாய். இதை என் தம்பி பின்லாடன் கேட்டிருக்க வேண்டும். தள்ளாத வயதிலும் பொல்லாத புலியெனப் பாய்ந்திருப்பான். எனது ஐந்தாவது மனைவியின் ஆறாவது குழந்தை கேட்டிருக்கவேண்டுமிதை விiளாட்டுத் துப்பாக்கியால் அடித்தே கொண்டிருப்பான்.

சதாம்: ஒரு மன்னனான நீ, கேவலம், ஒரு குடிசையில் எலிப்பொந்து போன்ற பதுங்குகுழியில் வாழ்ந்தது வெட்கமாக இல்லை.

புஸ்: முட்;டாள். நான் பிறந்ததே இதே ஊரில் உள்ள ஒரு குடிசையில்தான்.. நான் பிறக்கும் போது பிச்சைக்காரனாக ஏழையாகத் தான் பிறந்தேன். எனக்கு எதுவும் நட்டமில்லை. யாருக்கும் இறுதியாகச் சொந்தமாவது ஆறுக்கு இரண்டு அடி நிலம்தான். நான் கொஞ்சம் உயரமென்றபடியால் ஏழுக்கு இரண்டடி குழியைத் தெரிவு செய்தேன் அதிலென்ன தவறு.

புஸ்: விரைவில் நீதி விசாரணைக்குத் தயாராக இரு.

சதாம்: நான் என்ன தவறு செய்தேன். ரோசமுள்ள ஒரு நாட்டுத் தலைவன் செய்ததைத் தான் நானும் செய்தேன். கேவலம் எறும்பு கூட தன்னை மிதிப்பவனைக் கடித்துவிட்டுத்தான் இறக்கும்.. நான் வீரன்.

புஸ்: நீ ஈராக்கிய மக்களை வகை தொகையின்றி கொலைசெய்தாய்?

சதாம்: நீ யுத்தம் என்ற பெயரில் எத்தனை குழந்தைகளைக் கொலை செய்தாய். நீ விதித்த பொருளாதாரத் தடையால் லட்சக்கணக்கான குழந்தைகள் ஈராக்கில் இறந்தார்களே, அதற்கு உனக்கு யார் தண்டனை தருவது?

புஸ்: நாங்கள் காரணமின்றி எதையும் செய்யமாட்டோம். ஒப்புக்காவது ஒரு விசாரணை வைப்போம்.

சதாம்: முட்டாள் நீ மட்டும் இப்போது கைதுசெய்யும் முஸ்லிம்களை எங்கே விசாரிக்கிறாய்? குவற்றனமா சிறையில் போட்டு யாரும் பார்க்க முடியாதபடி வைத்திருக்கிறாயே! அவர்கள் மீது விசாரணையுமில்லை. எங்கேயென்ற விலாசமுமில்லை.

புஸ்: ஜனநாயகத்தை குழிதோன்றிப் புதைத்துவிட்டு சர்வாதிகார ஆட்சி நடத்தியுள்ளாய்.

சதாம்: நீ மட்டும் என்னசெய்தாய். 85 வீதமான அமெரிக்கர்கள், மற்றும் உலகிலுள்ள மூன்றில் இரண்டு மக்கள், ஏன் ஐ.நா சபையே - ஈராக் யுத்தத்தை எதிர்க்கும் போதும், நீ யுத்தம் நடத்தினாயே. அதற்குப் பெயர் ஜனநாயகமா?

புஸ்: நீ பல பெண்களை சின்ன வீடாக வைத்திருக்கிறாய்.!

சதாம்: அதுதான் உங்களுக்கு எரிச்சல். நீங்கள் சின்னவீடு செற்றப் செய்தால் உடனே அமெரிக்கப் பத்திரிகைகள் அதை பெரிதாக எழுதிவிடும் என்ற பயம். கிளிண்டன், மோனிக்கா பிரச்சினையிலிருந்து தப்பத்தானே என் மீது யுத்தம் தொடுத்தார். மறந்துவிட்டாயா?

புஸ்: குவைத் மீது நீ தாக்குதல் நடத்தியது தவறு?

சதாம்: ஆ! அதைக் கேட்க உனக்கென்ன உரிமை.. நீ எண்ணைக்காக ஈராக் மீது தாக்குதல் நடத்தலாம், நான் அதே எண்ணைக்காக குவைத் மீது தாக்குதல் நடத்தக் கூடாதோ?

புஸ்: ஈரான் மீது நீ தாக்குதல் நடத்தியது குற்றம்!

சதாம்: ஆ! ஏவுகணைகளை எமக்குத் தந்து ஏவிவிட்டாய். சண்டைக் கோழிகளாய் நாம் சிண்டைப் பிடித்தோம். அண்டை நாட்டின் துண்டைப் பிடிக்க... காயங்கள் எமக்கு ஆதாயங்கள் உமக்கு..

புஸ்: எப்படி என் சமார்த்தியம்?

சதாம்: முட்டாள்.. எத்தனை நாள் தான் நாம் முட்டாளாக இருப்போம். நீ கொடுத்த ஆயுதங்கள்.. உனது விமானம்.. உனது குண்டுகளை வைத்து நாம் எங்களுக்குள் அடிபட்டது பழைய கதை. புதிய கதை உனது விமானம் உனது குண்டுகளை வைத்து உனது நாட்டில் செப்டம்பர் தாக்குதலை நடத்தியதை மறந்துவிட்டாயா?

புஸ்: அமெரிக்கர்களிடம் மன்னிப்புக் கேட்டு பிழைத்துப் போகும் வழியைப் பார். ஆணவமாகக் கதைத்து கோபத்தைக் கிளறாதே?

சதாம்: நீ யார் என்னை விசாரிக்க? ஐ.நா சபையிலே அனுமதி பெற்றாயா? பாதுகாப்பு கவுன்சிலில் பெமிசன் பெற்றாயா? உனக்கென்ன உரிமை என்னை விசாரிக்க?

புஸ்: ஆ! ஐ.நா சபை..! எனது வீட்டோ உரிமையை வைத்தே அதனை மடக்கிவிட்டேன்.

சதாம்: ஆனால் நேட்டோ அமைப்பு சிதறப்போகிறதே பார்த்தாயா? ஈராக் மீது நீ தாக்குதல் தொடுத்ததால் பிரான்ஸ் ஜேர்மனி உனது நேட்டோ அமைப்பை விட்டு விலகி ஐரோப்பிய யுூனியன் அமைப்பைத் தொடரப் போகிறார்களே கவனித்தாயா?

புஸ்: அதற்காகத் தானே - ஈராக் புனர் நிர்மானத்திற்கான ஒப்பந்த வேலைகளை அவர்களிடம் நான் கொடுக்காமல் விட்டேன்..

சதாம்: புனர்நிர்மாணம்.. ஆகா நல்ல பெயர். எண்ணைக் கொள்ளைக்கு நீ வைத்த பெயர். அவர்களிடம் நான் வாங்கிய கடனுக்காக அவர்கள் ஈராக்கின் எண்ணையை எடுக்கப் போகிறார்களே அப்போது நீ என்ன செய்வாய்?

புஸ்: சரி சரி நீ ஒளித்துவைத்துள்ள பில்லியன் கணக்கான டொலர்களை என்னிடம் கொடுத்துவிடு.. அதை அவர்களிடம் கொடுத்துவிடுகிறேன். அல்லது எனது அடுத்த தேர்தல் செலவுக்காகவது பயன்படுத்தலாம்.. உன்னை மன்னித்துவிடுகிறேன்.. எங்காவது ஒரு நாட்டில் உனக்கு அடைக்கலம் தர முயற்சிக்கிறேன்.

புஸ்: நான் எண்ணை விற்றுப் பிழைப்பவன். நீ நினைப்பதைப் போல் என்னை விற்றுப்பிழைப்பவனல்ல.

(அப்போது அமெரிக்க இடைக்கால சபைத் தலைவர் போல் பிறைமர் ஓடி வருகின்றார்.)

போல்: ஐயா ஜனாதிபதி புஸ் அவர்களே! நாம் மோசம் போய்விட்டோம். இன்னொரு சதாமும் பிடிபட்டிருக்கி;ன்றார்?

புஸ்: என்ன சொல்கிறாய்?

போல்: ஆம் ஜனாதிபதி! சதாம் மாதிரி பத்துப் பேர் இருக்கின்றார்களாம். அதில் ஒருவர் தான் இவர். இன்னும் ஒருவரும் பிடிபட்டிருக்கின்றார். அவருக்கு சதாம் மாதிரி மச்சம் எல்லாம் இருக்கின்றதாம்.

புஸ்: அப்படியென்றால் இவனின் எச்சில் சதாமின் எச்சிலுடன் டி.என்.ஏ பரிசோதனையில் ஒத்துப் போனதாகச் சொன்னாயே?

போல்: ஐயா, அது.. முன்னர் நாம் எடு;த்த சாம்பிள் எல்லாம் உண்மையான சதாமின் சாம்பிள்கள் அல்ல. போலிச் சதாமின் சாம்பிள்களைத் தான் நாம் எடுத்து வைத்துள்ளோம். அவற்றோடு தான் இப்போது எல்லாம் ஒத்துப்போகின்றன.

புஸ்: அப்போது நாம் இப்போது பிடித்து வைத்துள்ளவர்களின் யார்தான் சதாம்?

போல்: அது அந்த அல்லாவிற்குத் தான் வெளிச்சம். ஜனாதிபதி அவர்களே ஏன் நடுங்குகிறீர்கள்?

புஸ்: இல்லை உடனடியாக இங்கிருந்து போக வேண்டும். விமானத்தை ஆயத்தப்படுத்தும்.

போல்: நாங்கள் இரவில் விமானத்தின் விளக்குகளை அணைத்துவிட்டு வந்தோம். இப்போது போவது ஆபத்து.

புஸ்: ஏன் இப்போது விளக்குகளை அணைத்தால் அணைபடாதோ?

போல்: ஜனாதிபதி அவர்களே இப்போது பகலாகிவிட்டது. விளக்குகளை அணைத்தாலும் பயனில்லை. சதாம் தொழப்போவதாகக் கூறி அரைமணி நேரம் உங்களை தாமதிக்க வைத்தது இதற்காகத்தான் போலும்..

புஸ்: கடவுளே அப்போ நான் இங்கேயே ஈராக்கிலே மடிவதா?

போல்: இரவு இருட்டுப் படும் வரை நாம் இங்கேதான் இருக்க வேண்டும்.

புஸ்: இங்கே பாதுகாப்பாக இருக்க ஏதும் இடம் உள்ளதோ?

போல்: ஒரு இடம் இருக்கு?

புஸ்: எது எங்கை. உடனே என்னை அங்கு கொண்டுபோங்கள்

போல்: அது நாங்கள் கைது செய்தபோது சதாம் ஒளித்திருந்த - அந்த சிறிய எலிப்பொந்து போன்ற அந்த பதுங்கு குழிதான். அங்குதான் யாரும் இப்போது வரமாட்டார்கள். யாரையும் சந்தேகப்பட மாட்டார்கள்.

புஸ்: சரி பரவாயில்லை அங்கேயே போய் இருட்டும் மட்டும் இருப்பம்.. வாரும்..


நன்றி: ஈழமுரசு (கனடா)
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
[No subject] - by sOliyAn - 09-29-2003, 12:26 AM
[No subject] - by Mullai - 09-29-2003, 06:53 PM
[No subject] - by veera - 09-30-2003, 11:44 AM
[No subject] - by sOliyAn - 09-30-2003, 09:48 PM
[No subject] - by veera - 10-01-2003, 10:49 AM
[No subject] - by ganesh - 12-12-2003, 03:41 PM
[No subject] - by ganesh - 12-12-2003, 03:55 PM
[No subject] - by ganesh - 12-12-2003, 04:02 PM
[No subject] - by ganesh - 12-12-2003, 04:11 PM
[No subject] - by ganesh - 12-12-2003, 04:24 PM
[No subject] - by shanmuhi - 12-12-2003, 05:46 PM
[No subject] - by ganesh - 12-15-2003, 04:27 PM
[No subject] - by sethu - 12-21-2003, 10:03 AM
[No subject] - by ganesh - 12-22-2003, 10:48 AM
[No subject] - by ganesh - 12-22-2003, 10:54 AM
[No subject] - by kuruvikal - 12-22-2003, 11:13 AM
[No subject] - by ganesh - 12-23-2003, 05:16 PM
[No subject] - by ganesh - 12-23-2003, 05:19 PM
[No subject] - by Selan - 12-23-2003, 06:04 PM
[No subject] - by ganesh - 12-23-2003, 07:24 PM
[No subject] - by ganesh - 12-23-2003, 07:35 PM
[No subject] - by Ilango - 12-23-2003, 11:10 PM
[No subject] - by shanthy - 12-23-2003, 11:20 PM
[No subject] - by shanthy - 12-23-2003, 11:21 PM
[No subject] - by Paranee - 12-24-2003, 05:40 AM
[No subject] - by ganesh - 12-25-2003, 01:40 PM
[No subject] - by kuruvikal - 12-25-2003, 01:52 PM
[No subject] - by ganesh - 12-25-2003, 02:44 PM
[No subject] - by ganesh - 12-25-2003, 06:41 PM
[No subject] - by vasisutha - 12-27-2003, 04:30 AM
[No subject] - by ganesh - 01-08-2004, 08:48 PM
[No subject] - by ganesh - 01-08-2004, 08:49 PM
[No subject] - by ganesh - 01-08-2004, 08:52 PM
[No subject] - by kuruvikal - 01-08-2004, 08:55 PM
[No subject] - by ganesh - 01-08-2004, 10:03 PM
[No subject] - by sOliyAn - 01-08-2004, 11:23 PM
[No subject] - by kuruvikal - 01-08-2004, 11:53 PM
[No subject] - by shanthy - 01-09-2004, 11:33 PM
[No subject] - by kuruvikal - 01-09-2004, 11:44 PM
[No subject] - by sOliyAn - 01-09-2004, 11:49 PM
[No subject] - by kuruvikal - 01-09-2004, 11:54 PM
[No subject] - by sOliyAn - 01-10-2004, 12:24 AM
[No subject] - by vasisutha - 01-10-2004, 01:48 AM
[No subject] - by sOliyAn - 01-10-2004, 02:11 AM
[No subject] - by vasisutha - 01-10-2004, 02:15 AM
[No subject] - by sOliyAn - 01-10-2004, 02:22 AM
[No subject] - by kuruvikal - 01-10-2004, 11:55 AM
[No subject] - by Kanakkayanaar - 01-17-2004, 12:37 PM
[No subject] - by vasisutha - 01-18-2004, 11:01 AM
[No subject] - by ganesh - 01-18-2004, 08:06 PM
[No subject] - by vasisutha - 01-24-2004, 05:21 PM
[No subject] - by shanthy - 01-24-2004, 07:26 PM
[No subject] - by sOliyAn - 01-24-2004, 11:56 PM
[No subject] - by ganesh - 01-28-2004, 09:00 PM
[No subject] - by vasisutha - 02-01-2004, 10:59 PM
[No subject] - by vasisutha - 02-05-2004, 12:24 AM
[No subject] - by sOliyAn - 02-05-2004, 12:26 AM
[No subject] - by Mathan - 02-05-2004, 12:34 AM
[No subject] - by vasisutha - 02-05-2004, 12:35 AM
[No subject] - by Manithaasan - 02-07-2004, 11:06 AM
[No subject] - by Mathivathanan - 02-07-2004, 11:19 AM
[No subject] - by kuruvikal - 02-07-2004, 11:51 AM
[No subject] - by vasisutha - 02-08-2004, 06:41 PM
[No subject] - by vasisutha - 02-10-2004, 10:51 AM
[No subject] - by shanmuhi - 02-10-2004, 11:46 AM
[No subject] - by vasisutha - 02-11-2004, 05:58 PM
[No subject] - by nalayiny - 02-11-2004, 09:10 PM
[No subject] - by Rajan - 02-12-2004, 10:36 PM
[No subject] - by Rajan - 02-12-2004, 10:43 PM
[No subject] - by Mathan - 02-13-2004, 12:26 AM
[No subject] - by vasisutha - 02-17-2004, 06:25 PM
[No subject] - by vasisutha - 02-17-2004, 06:38 PM
[No subject] - by sOliyAn - 02-17-2004, 06:44 PM
[No subject] - by vasisutha - 02-18-2004, 04:10 PM
[No subject] - by shanmuhi - 02-18-2004, 04:14 PM
[No subject] - by sOliyAn - 02-18-2004, 11:31 PM
[No subject] - by vasisutha - 02-19-2004, 12:38 AM
[No subject] - by sOliyAn - 02-19-2004, 12:54 AM
[No subject] - by Paranee - 02-19-2004, 04:40 AM
[No subject] - by Eelavan - 02-19-2004, 04:48 AM
[No subject] - by sOliyAn - 02-19-2004, 01:33 PM
[No subject] - by yarl - 02-19-2004, 01:49 PM
[No subject] - by sOliyAn - 02-19-2004, 01:56 PM
[No subject] - by Mathan - 02-19-2004, 03:12 PM
[No subject] - by vasisutha - 02-19-2004, 03:46 PM
[No subject] - by vasisutha - 02-20-2004, 12:11 AM
[No subject] - by sOliyAn - 02-20-2004, 12:15 AM
[No subject] - by vasisutha - 02-20-2004, 12:17 AM
[No subject] - by vasisutha - 02-20-2004, 01:38 AM
[No subject] - by sOliyAn - 02-20-2004, 02:17 AM
[No subject] - by Paranee - 02-20-2004, 08:14 AM
[No subject] - by Paranee - 02-20-2004, 08:16 AM
[No subject] - by sOliyAn - 02-20-2004, 01:53 PM
[No subject] - by vasisutha - 02-24-2004, 11:48 PM
[No subject] - by vasisutha - 02-24-2004, 11:49 PM
[No subject] - by sOliyAn - 02-25-2004, 02:24 AM
[No subject] - by Paranee - 02-25-2004, 05:38 AM
[No subject] - by tamilini - 02-25-2004, 03:25 PM
[No subject] - by kuruvikal - 02-25-2004, 04:26 PM
[No subject] - by sOliyAn - 02-26-2004, 12:14 AM
[No subject] - by vasisutha - 02-26-2004, 01:12 AM
[No subject] - by Mathan - 02-26-2004, 01:25 AM
[No subject] - by vasisutha - 02-26-2004, 02:08 AM
[No subject] - by sOliyAn - 02-26-2004, 02:12 AM
[No subject] - by Mathan - 02-26-2004, 02:23 AM
[No subject] - by vasisutha - 02-26-2004, 02:25 AM
[No subject] - by Paranee - 02-26-2004, 05:37 AM
[No subject] - by kuruvikal - 02-26-2004, 12:51 PM
[No subject] - by sOliyAn - 02-26-2004, 01:17 PM
[No subject] - by Paranee - 02-26-2004, 01:18 PM
[No subject] - by sOliyAn - 02-26-2004, 01:20 PM
[No subject] - by Paranee - 02-26-2004, 01:25 PM
[No subject] - by sOliyAn - 02-26-2004, 01:35 PM
[No subject] - by kuruvikal - 02-26-2004, 02:09 PM
[No subject] - by sOliyAn - 02-26-2004, 11:52 PM
[No subject] - by vasisutha - 02-27-2004, 12:22 AM
[No subject] - by vasisutha - 02-27-2004, 12:26 AM
[No subject] - by கண்ணன் - 02-27-2004, 12:27 AM
[No subject] - by sOliyAn - 02-27-2004, 12:29 AM
[No subject] - by கண்ணன் - 02-27-2004, 12:31 AM
[No subject] - by vasisutha - 02-27-2004, 12:34 AM
[No subject] - by sOliyAn - 02-27-2004, 12:35 AM
[No subject] - by கண்ணன் - 02-27-2004, 12:51 AM
[No subject] - by vasisutha - 02-27-2004, 12:55 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)