Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்ததில் பிடித்த சில கதைகள்
#1
வாய்

அந்த இளைஞனை நெடுநேரமாய் கூர்ந்து பார்த்தேன்....

எங்கேயோ பார்த்த முகம்... நன்கு தெரிந்த ஒரு முகத்தின் அச்சு மின்னி மின்னி மறைந்தது... யாராக இருக்கலாம் ... கேட்க வேண்டும்போல மயிர்க் கூச்செறிந்தது...

திகைத்து நின்றேன்...

கழுத்தில் சுருட்டிவிட்ட நேர்த்தியான இளம் கம்பளிச் சட்டை, உடம்போடு அளவாகப் பிறந்ததுபோல நேர்த்தியான லோங்ஸ்... அவனுடைய சப்பாத்தின் கூரிய முனையின் பளபளப்பில் என் முகம் தெரிந்தது...

அருகில் சென்றேன்... மேலும் ஒரு அடுக்கு கூர்மையாகப் பார்த்தேன்... களிம்பு போட்டு சுருள விட்ட கேசம்...அரும்பாத புதிய மீசை.. உயரம் போலவும், திடகாத்திரம் போலவும் ஒரு காந்தத் தோற்றம்..

கதைப்பதற்கு ஆயத்தமானேன்.. அதற்குள் யாரோ ஒருவர் கைகாட்ட ஓடிப்போய் காரில் ஏறுகிறான்...

யாராக இருக்கலாம் ....

நான் நின்று கொண்டிருந்த பந்தடி மைதானத்தை நோக்கி பார்வையை வட்டமாகச் சுற்றவிட்டேன்... அவன் அங்கு யாரையோ கூட்டிப்போக வந்திருக்க வேண்டும்..

ஒரு வாரம் ஓடியது...

மீண்டும் அதேபோல ஒரு புதன்கிழமை மாலை அந்த மைதானத்தில் அவனைக் கண்டேன்..

அவன் காரை நிறுத்திவிட்டு மைதானத்தை நோக்கி வேகமாக வருகிறான். யாரோ இரண்டு சிறுவர்களை அழைத்துப் போகவே அவன் வருவது தெரிந்தது. அவனுக்கு அருகாமையில் ஓடிப்போனேன்...

அவன் என்னை விநோதப் பிராணிபோல பார்த்துக் கொண்டான்.

உருவம் சரி... அவனுடைய வாய் மட்டும் சுhPரென இடித்தது.... வாயின் அமைப்பு நாகம்போல சுருண்டு மேலெழுந்த சொண்டு ....

வெடிகுண்டுக்குள் அகப்பட்ட சுண்ணாம்புக் கட்டிடம் போல மனது படபடவென இடிந்து விழுந்தது.

ஆண்டவனே இவனுடைய வாயை மட்டும் ஏன் இந்த அமைப்பில் வைத்தாய்? ஒரு அழகான வாயை அவனுக்குக் கொடுத்திருக்கலாமே...

இலட்சக்கணக்கான வாய்களை அவதானித்து வந்திருக்கிறேன்.. நாசம் செய்யும் மனிதர்களுக்குப் படைக்கும் அதே வாயை ஏன் இவனுக்கும் ஏன் படைத்தாய்...

வாய்கள் பற்றிய எனது ஆராய்ச்சி தடுமாறியது... சில வேளைகளில் புறநடைகளும் இருக்கலாம்...

தம்பி .... நீர்.... அவனுடைய ஊரை விசாரித்தேன்.

ஓம் ! நீங்கள்....

,நான் கதிரேசு ! உம்முடைய அப்பாவின் நண்பன்.. நீர் சுந்தரமூர்த்தியின் மகன்தானே ? ,

, ஓம்... எப்பிடி... ,

, உம்முடைய அப்பாவின்ரை முகம் உம்மட்டையும் அப்பிடியே இருக்கு... வாய் மட்டும் கொஞ்சம் வித்தியாசம்... சிலவேளை அம்மாவின்ரை சாயலாக இருக்கலாம்.,

அவன் ஒரு கடையில் முகாமையாளராக இருக்கிறான் ... நல்ல உத்தியோகம்...

அவன் பேசியபோது ஒரு வார்த்தைகூட கடுமையாக வரவில்லை... எல்லாமே சரியாக இருந்தது... அன்பு ... அறம்... பண்பு அத்தனையும் கலந்து தமிழை அப்படி அழகாகக் கொடுத்தான். சாய் ... திருவள்ளுவரும் இப்படித்தானே நல்ல வார்த்தைகளைப் பேசச் சொல்லியிருக்கிறார்...

நேரம் முக்கியம்... 5.15 க்கு முந்தி கடையில் நிக்க வேணும். நேரம் இருந்தார் வாருங்கோ... விசிட்டிங் காட்டைத் தந்தான்... தங்கநிற மட்டையில் அவன் பெயர் ஜொலித்தது...

அவனுடைய கடை வெகு தொலைவில் இல்லை... இலகுவாகப் போய்ச் சேர்ந்துவிட்டேன். நெடுநேரமாகப் பேசினேன்... அவன் மனிதரில் மாணிக்கம், து}ய வெள்ளை ஆடையைப் போன்றவன். வாய்களை வைத்து மற்றவரை எடைபோடக் கூடாது என்று உறுதி புூண்டேன்.

இதுவரை காலமும் உலகப் புகழ்பெற்ற இராஜதந்திரிகள், சதிகாரரின் வாய்கள் எப்படியிருக்குமெனச் செய்த ஆய்வுகளை அவனுடன் பேசியதும் து}க்கி வீசினேன்..

அவனுடைய கடையில் ஒரு சோடா வாங்கிக் குடித்தேன்.. விடைபெற்றேன்... வாசல்வரை வந்து வழியனுப்பினான்...

அவன் சொண்டில் குதறி ஓடும் மிடுக்கான சிரிப்பும், கசியும் உமிழ் நீரும் விமல்ல அமுதம்தான்... உறுதியாக முடிவு செய்தேன்...

அடுத்த வாரம்தான் அது நடந்தது...

அவனுடைய கடையில் ஒரே கூட்டமாக இருந்தது. ஓடோடிப் போனேன்.. அவன் அங்கே வட்டமாகச் சூழ்ந்து நின்ற தமிழ்க் காடையர்களுடன் மோதிக் கொண்டிருந்தான். தாக்குதல் உச்சகட்டமடைகிறது... இவன் சரேலென மடியில் கிடந்த கத்தியை எடுத்து ஒருவனின் வயிற்றைக் கிழிக்கிறான்... குடல் கொட்டுப்பட அந்த ஒருவன் அலறியபடி ஓடுகிறான்... யார் பெத்த பிள்ளையோ வெளிநாடு வந்து இப்படி குத்துவாங்கி ஓடுகிறது...

வீதி முழுவதும் பயங்கர ஒலம்... போலீஸ் வண்டிகள் இலையான் கூட்டம் போல மொய்க்கின்றன... அவன் பாய்ந்து ஓடுகிறான்... போலீஸ் வாகனம் அவனை மடக்கிப் பிடிக்கிறது..

ஏன்... என்ன நடந்தது ? சுற்றி நின்ற யாருக்கும் தெரியவில்லை...

தமிழ் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் போல இவனும் நீதிக்காகப் போராடுகிறானா ? இருந்தாலும் கத்தியால் குத்தலாமா ? ஐரோப்பா வந்து இப்படி இரத்தம் சிந்துகிறார்களே... ஒரு வேளை அவன் கத்தியால் குத்தியிருக்காவிட்டால் அந்தக் கூட்டத்தின் தாக்குதலில் இருந்து தப்பியிருக்க முடியாது...

கத்தி எடுத்தாலும் ஏனோ இப்போதும் மனதில் அவனே உயர்ந்து நின்றான்...

வீடு வந்து சேர்ந்தேன்...

கதவோரமாக கடிதங்கள் தாமதமாக வந்து கொட்டுப்பட்டுக் கிடந்தன...

ஊர்க்கடிதங்கள்... காசு கேட்டுக் கடிதங்கள்... ஒவ்வொன்றாகப் படித்து கடைசியாக வேண்டா வெறுப்புடன் வங்கியில் இருந்து வந்த கடிதத்தைப் பிரித்தேன்..

மூன்று மாதச் சம்பளம் வங்கியில் முன்பணமாக கடனாகத் தருகிறார்கள். அதை எடுத்துத்தான் எத்தனையோ காரியங்கள் செய்ய வேண்டும். ஊருக்குப் புறப்பட வேண்டும். ஊர் போனால் பார்க்கப் போகும் வீடெல்லாம் பணம் கொடுக்க வேண்டிய கலாச்சாரத்தை உருவாக்கிவிட்டார்கள்... மூன்று மாதச் சம்பளம் போதாது... போதாது...

மனைவி பிள்ளைகளைப் பார்க்க வேண்டும். பணம் கேட்டு வந்த கடிதங்களில் ஏதாவது ஒன்றுக்காவது கொடுக்க வேண்டும். வங்கிக் கடிதத்தை உடைத்து வரவைப் பார்த்தேன்..

மனம் திக்கென்றது....

மூன்றுமாத சம்பளப் பணம் 40.000 மும் போய் இருபதாயிரம் மைனஸ் என்றும் எழுதியிருந்தது... திங்களுக்குள் பாக்கியைக் கட்டாவிட்டால் வங்கிக் கணக்கை நிறுத்திவிடுவதாக எழுதியிருந்தார்கள்.

எங்கே எனது பணம்... ? யார் எடுத்தார்கள் ? கடுமையாக யோசித்தேன்... நான் எனது வீசாக்கார்ட்டை யாரிடமும் கொடுக்கவில்லையே என்ன நடந்தது ? தடுமாறினேன். மூளையில் ஒரு மின்னல் வெட்டு...

ஒரு கொக்கோகோலா போத்தல் தலைக்குள் ஓடியது...

அவனுடைய கடைக்குப் போனபோது சோடா வேண்டுவதற்காக ஒருதடவை அந்தக் கிரடிட் கார்ட்டை இழுத்தது நினைவிற்கு வந்தது...

அடப்பாவி இப்படி ஏமாற்றிவிட்டானே....

அவனை அடித்தவர்களும் இப்படித்தானா ஏமாற்றப்பட்டார்கள் ?

துடித்துப் பதைத்து.. மலாரடித்து... வீதியில் இறங்கி ஓடுகிறேன்...

அவன் வாய் கண்ணுக்குள் சுழன
Reply


Messages In This Thread
படித்ததில் பிடித்த சில கதைகள் - by நர்மதா - 01-02-2006, 02:24 AM
[No subject] - by Snegethy - 01-02-2006, 02:33 AM
[No subject] - by அருவி - 01-02-2006, 03:55 AM
[No subject] - by RaMa - 01-02-2006, 04:39 AM
[No subject] - by ப்ரியசகி - 01-02-2006, 11:22 AM
[No subject] - by Rasikai - 01-02-2006, 02:46 PM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:22 PM
[No subject] - by நர்மதா - 01-02-2006, 06:00 PM
[No subject] - by நர்மதா - 01-02-2006, 06:11 PM
[No subject] - by கீதா - 01-02-2006, 06:22 PM
[No subject] - by நர்மதா - 01-02-2006, 06:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)