01-02-2006, 12:59 AM
பட்டிமன்றத்தில் கருத்துக்கள் வைத்த அனைத்து கருத்தாளர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மிகச் சிறப்பாக உங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள். நான் வியந்த ஒரு விடயம் என்னவென்றால், இத்தனை சிறப்பாக கருத்துக்களை இந்தப்பட்டிமன்றத்தில் முன்வைப்பவர்கள், ஏன் மற்றைய தலைப்புகளில் நடக்கின்ற கருத்தாடல்களில் தங்களது கருத்தை முன்வைப்பதில்லை என்பதுதான். இனி வரும் காலங்களிலாவது மற்றைய கருத்தாடல்களிலும் நீங்கள் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.
குறிப்பாக எமது அணி சார்பாக கருத்துக்களை முன்வைத்த விஸ்ணு வியக்க வைத்துள்ளார். மாணவர்கள் (இளைஞர்கள்) இணையம் மூலம் எப்படிப் பயனடைகிறார்கள் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
அது ஒருபுறமிருக்க,
செல்வமுத்து அவர்களும் தமிழினியும் இணைந்து ஆரம்பத்தில் வெகுசிறப்பாக நடுவர் பங்கை ஆற்றினார்கள். பின்பு செல்வமுத்து அவர்கள் பட்டிமன்றத்தில் நடுவராகக் கலந்துகொள்ள முடியாத சூழலிலும், தன்னந்தனியாக தமிழினி மிகச் சிறப்பாக கருத்துக்களை வாசித்து, அவற்றைத் தொகுத்து, தனது கருத்துக்களை முன்வைத்து தனது நடுவர் பணியை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கும் பாராட்டுக்கள்.
தொடர்ந்து வருகின்ற கருத்தாளர்களும் சோர்வடையமால் உற்சாகத்துடன் தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும்.