01-02-2006, 12:10 AM
இங்கே உடனடித்தேவைகள் இருப்பின் தற்காலிக தீர்வாக உணர்வாளர்கள் நேரடியாக பொருளாதார உதவிகளை செய்யலாம். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு என்பது உரிய விளம்பரதாரர்களை பெற்றுக் கொள்ளுவது.
தமிழ் தேசிய தொலைக்காட்சியின் நாளாந்த ஒளிபரப்பு நேரமானது (2100-2200 மத்திய ஜரோப்பிய நேரம்/CET) தமிழ் ஒளி இணையத்தின் 24 மணி சேவையில் மிகவும் பெறுமதிமிக்க அதிக பார்வையாளர்களை கவரும் நேரம் (prime time). அதிலும் மிக முக்கியமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் <b>நிலவரம், நிகழ்வுகளின் ஆய்வகம்</b> என்ற அரசியல் கலந்துரையாடல் நடக்கும் நேரமானது மிகவும் பெறுமதிவாய்ந்தது.
தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகளும் <b>அம்பலம்</b> பேன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டது.
அதைவிட தமிழீழத்தின் பொருளாதாரம், கல்வி, கலை கலாச்சாரம், வாழ்வியல், சமூகங்களின் இன்னல்கள், பின்தங்கிய கிரமாங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கான குறைபாடுகள் பற்றி தமிழீழ நிர்வாகத்தின் அலகுகள் பற்றி என பல புதிய பயனுள்ள விவரணங்கள் சேர்க்கப்படுகின்றன அவர்களது வாரநாள் நிகழ்ச்சிகளில்.
தமிழீழத் தொலைக்காட்சியானது அவர்களது ஒவ்வொரு நிகழ்ச்சிகள் மூலம் தமிழீழத்தின் அன்றாட வாழ்வின் சவால்கள் முதல் வராலாற்று வெற்றிகள் வரை நிதானமாக ஆவணப்படுத்தி உங்களோடு பகிருகிறார்கள். அங்குள்ள யதார்த்தத்தை நாள்தோறும் உங்களின் வீடுகளின் சொகுசில் இருந்து அறிந்து கொள்ள உதவுகிறார்கள். புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கு மாத்திரமல்ல உலகத்திற்கும் உடனுக்குடன் ஒளிக்காட்சிகளாக சாட்சிகளாக அனுப்பி வைக்கிறார்கள். உதாரணத்திற்கு 19 மார்கழியில் யாழ்பல்கலைக்கழ சமூகத்தின் அமைதி ஊர்வலத்தின் போது அவர்கள் மீது இராணுவம் கட்டவிழ்த்து விட்ட வன்முறை அன்றைய தமிழ்தேசிய தொலைக்காட்சியின் செய்திகளில் ஒளிவடிவில் சொற்களால் வர்ணிக்க முடியாத அந்த அராஜகம் உலகம் முழுவதற்கும் சாட்சியாக்கப்பட்டது 24 மணத்தியாலங்களிற்குள்.
தமிழ்த் தேசிய தொலைக்காட்சி செய்யும் இந்த வரலாற்றுச் சேவையை தமிழ் உணர்வுள்ள வியாபார வணிக நிறுவனங்கள் உணர வேண்டும். உங்கள ஆதாரவு தமிழ் தேசியத்திற்கு வலுச் சேர்பது மாத்திரமல்ல உரிய விளம்பரத்தையும் உடனடிப்பயனாக பெற்றுக் கொள்வீர்கள்.
கள உறவுகளே உங்களில் யாராவது விளம்பரத்துறையில் படித்து கொண்டிருந்தால் அல்லது வேலை செய்து கொண்டிருந்தால் உங்கள் நிபுணத்துவத்தை பயன்படுத்தி தமிழ்த் தேசியத் தொலைக்காட்சிக்கு ஒரு சிறந்த விளம்பர அறிமுக தந்திரோபாயத்தை (marketing & promotional strategy) உருவாக்கி கொடுக்க முன்வாருங்கள்.