Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நில நடுக்க எதிர்வு கூறல்
#2
ஜன. 2ல் பெரிய பூகம்பம் ஏற்படும்: சென்னை விஞ்ஞானி எச்சரிக்கை
டிசம்பர் 31, 2005

சென்னை:

ஜனவரி 2ம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சென்னை பல்கலைக்கழக பயன்பாட்டு புவியியல் (அப்ளிகேஷன் ஜியாலஜி) துறைத் தலைவர் வெங்கடநாதன் எச்சரித்துள்ளார்.



இதுதொடர்பாக வெங்கடநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதற்கு முன்பு பல நிலநடுக்கங்களை 'ஜியோ அஸ்ட்ரோ பிசிக்கல்' கணக்கீடுகளின்படி சரியான முறையில் கணித்துக் கூறியுள்ளேன். அந்த வகையில் ஜனவரி 2ம் தேதி உலகின் பல்வேறு பகுதிகளில் சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்க உள்ளதை கணித்துள்ளேன்.

இந்தோனேஷியாவின் சுமத்ரா மற்றும் இந்தியாவின் அருணச்சாலப் பிரதேசம் மாநிலத்திற்கு தென் மேற்கில் இந்த பூகம்பம் ஏற்படும். ரிக்டர் அளவு கோலில் 7.0 என்ற அளவில் இது இருக்கும்.

அதேபோல இமாச்சலப் பிரேதசம், பூட்டான், ஜப்பானில் உள்ள ரைக்யூ தீவுகள், ஆஸ்திரேலியா அருகே பாபுவா நியூகினியா தீவுக் கூட்டத்தில் உள்ள நியூ பிரிட்டன் ஆகிய பகுதிகளிலும் 5 முதல் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும்.

இந்த நிலநடுக்கங்களால் பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் வெங்கடநாதன்.

வெங்கடநாதன் கூறுவது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 01-01-2006, 04:47 PM
[No subject] - by kurukaalapoovan - 01-01-2006, 04:50 PM
[No subject] - by ஊமை - 01-01-2006, 05:27 PM
[No subject] - by kurukaalapoovan - 01-01-2006, 05:43 PM
[No subject] - by நர்மதா - 01-01-2006, 06:05 PM
[No subject] - by kurukaalapoovan - 01-01-2006, 06:14 PM
[No subject] - by நர்மதா - 01-01-2006, 07:37 PM
[No subject] - by Vasampu - 01-01-2006, 07:50 PM
[No subject] - by Netfriend - 01-01-2006, 07:55 PM
[No subject] - by தூயா - 01-02-2006, 01:08 AM
[No subject] - by kurukaalapoovan - 01-02-2006, 01:19 AM
[No subject] - by sinnakuddy - 01-02-2006, 02:36 PM
[No subject] - by நர்மதா - 01-02-2006, 03:57 PM
[No subject] - by kurukaalapoovan - 01-02-2006, 04:13 PM
[No subject] - by தூயவன் - 01-02-2006, 04:26 PM
[No subject] - by Thala - 01-02-2006, 04:32 PM
[No subject] - by kurukaalapoovan - 01-02-2006, 05:01 PM
[No subject] - by ஊமை - 01-02-2006, 05:22 PM
[No subject] - by Vaanampaadi - 01-02-2006, 05:45 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)