01-01-2006, 07:22 AM
kuruvikal Wrote:kurukaalapoovan Wrote:தமிழ் இலக்கணம் எனக்கு தெரியாது. ஆனால் எந்த மொழியிலும் பாவனையில் உள்ள சொற்களின் உச்சிப்புகளிற்கு ஒலி அற்ற முறையில் பிரதிநிதித்துவம் கொடுக்கத்தானே எழுத்துருக்கள் உருவானது.
வேற்று மொழிச் சொற்களை தமிழில் மூலமொழியின் மூல உச்சரிப்பை மாசுபடுத்தாது பிரதிநிதித்துவப்படுத்த புதிய உச்சரிப்புக்களுக்கு ஏற்ற எழுத்துருக்களை புகுத்த வேண்டுமா?
ஞ இ ஞி
கு இ குp
சு இ சுp
பு இ புp
று இ றுp
வு இ வுp
குறுக்ஸ்.. நீங்கள் எதிர்பார்ப்பது ஏற்கனவே தமிழில் நடந்துவிட்டது. தமிழுக்குள் ஏற்கனவே வேற்றுமொழி உச்சரிப்புக்கு ஏற்ப சில வேற்றுமொழி எழுத்துக்கள் புகுத்தப்பட்டுதான் இருக்கிறது. தமிழ் நெடுங்கணக்கில் இல்லாத ஹ் . ஷ் .ஜ் போன்றவற்றை உதாரணமாகக் காட்டலாம். ஆனால் இவை தமிழுக்கான எழுத்துக்களாக..அல்லது இவை கலந்து பாவிக்கப்படும் சொற்கள் தூய தமிழ் சொற்களாகக் கருதப்படுவதில்லை. தமிழுக்கு என்று ஒரு சிறப்பு அதற்கு என்று தனித்துவமான மொழி இலக்கண விதிமுறை இருக்கும் மட்டுமே சாத்தியம்.
ஆனால் பயன்பாட்டு ரீதியில் தமிழ் மற்ற மொழிகளை விட மிகவும் நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்கிறது. அதைப் பயன்படுத்தி நாம் தமிழ் வளர்க்கிறோம் என்பதிலும் நாம் தமிழுக்குள் தேவைக்கு செருகல் செய்கிறோம் என்பதே சாலப் பொருந்தும். உண்மையில் தமிழுக்குள் மாற்றம் வேண்டின் தமிழ் இலக்கண விதிகளுக்குள் மாற்றம் பெறப்பட வேண்டும். அதை செய்ய நாவலர் போன்று தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரையுள்ள தமிழ் இலக்கண வடிவங்களை தெளிவுற விளங்கி மாற்றங்களைப் புகுத்த வேண்டும். சும்மா கணணியில் சித்திரம் வரைவது போல அவரவர் கற்பனைக்கு விதிகளை மாற்ற முடியாது.அவற்றை மொழிச் சீர்திருத்தம் என்றும் கொள்ள முடியாது, கணணிக்கு ஏற்ற வகையில் தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் தமிழ்நாட்டில் தொடக்கி வைக்கப்பட்டு பல ஆண்டுகள் பின்னேதான் ஈழத்தில் அதன் தேவை உணரப்பட்டது. அந்த சீர்திருத்தம் அடிப்படை இலக்கண வரப்புகளுக்குள் இருந்து எழுத்தின் வடிவங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இன்று அப்படி அன்றி அடிப்படை இலக்கண விதிகளையே மீறி சகட்டுமேனிக்கு அவரவர் தாங்கள் தாங்கள் விளங்கிய மட்டில் மொழிச் சீர்திருத்தம்..மொழியில் ஆணாதிக்கம் பெண்ணடிமை என்று திரிக்கிறார்கள். (எனி நாளைக்கு இயற்கையையும் பழிப்பார்கள் போல...ஏன் நீ ஆணுக்கு அப்படி வைச்சா பெண்ணுக்கு இப்படி வைச்சா..எங்களையும் ஆண் ஆக்கு என்று..பெண்கள் பலருக்கு தங்கள் உயர்வுநிலை புரியவில்லை..தங்களை தாழ்த்தி நோக்குவதாலே அவர்கள் இப்படியெல்லாம் மட்டமாக சிந்திக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.) இப்படியான மேதைகள் தயவுசெய்து அடுத்த உலகத்தமிழ் ஒன்று கூடலின் போது இவற்றை முன்வைத்து ஒரு மொழி ஆய்வுக்கு உட்பத்தி அதன் பின் அவசியமான சீர்திருத்ததை தமிழுக்குள் கொண்டு வருவதே நியாயம் ஏற்புடையது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பயனுள்ள நல்ல கருத்துகள் குருவிகள்... நண்றி..
::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 