Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜோசப் பரராஜசிங்கத்தை எச்சரித்த மகிந்த ராஜபக்ச
#1
[b]<span style='font-size:30pt;line-height:100%'>ஜோசப் பரராஜசிங்கத்தை எச்சரித்த மகிந்த ராஜபக்ச: அம்பலப்படுத்துகிறது பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் </span>

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தேர்தலுக்கு முன்பாக எச்சரித்திருந்தார் என்ற உண்மையை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் அம்பலப்படுத்தியுள்ளது.


பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த செப்டம்பர் 6 ஆம் நாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கொழும்பில் வெளியாகும் 'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரம் பற்றி வழங்கிய செவ்வியில் "ராஜபக்ச போர்ப் பறை சாற்றுகிறார்" என்று கூறியிருந்தார்.

செப்டம்பர் 6ஆம் நாள் "டெய்லி மிரர்" பத்திரிகையில் செய்தி வெளியானதும், அப்போதைய பிரதமரான ராஜபக்ச, கொழும்பில் உள்ள ஜோசப் பரராஜசிங்கத்தின் இல்லத்திற்கு தொலைபேசி செய்து, பரராஜசிங்கத்துடன் பத்திரிகையில் வெளியான செய்தி பற்றி விவாதித்துள்ளார்.

அத்துடன் முடியுமானால் இந்த கூற்றைத் திரும்பப் பெறுமாறும் பரராஜசிங்கதிடம் வேண்டியுள்ளார். கொள்கைப் பற்றும் நேர்மையும் கொண்ட பரராஜசிங்கம், ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு செவிசாய்காத நிலையில், ராஜபக்ச 'தேர்தல் முடிவடைந்ததும் எனது உண்மை நிலையை நீங்கள் யாவரும் அறிவீர்கள்' என்று பரராஜசிங்கத்திடம் கூறியுள்ளார்.

இந்த கூற்று இரட்டைக் கருத்து கொண்ட காரணத்தினால் பரராஜசிங்கம் இவ்விடயத்தை தனது நெருங்கிய சாகாக்களுடனும், தமிழர் மனித உரிமை மையத்தின் பிரதிநிதிகளுடனும் பகிர்ந்துள்ளார்.

மேலும் வாசிக்க: http://www.eelampage.com/?cn=22990
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
ஜோசப் பரராஜசிங்கத்தை எச்சரித்த மகிந்த ராஜபக்ச - by வினித் - 12-31-2005, 12:57 PM
[No subject] - by MUGATHTHAR - 12-31-2005, 01:03 PM
[No subject] - by ஊமை - 12-31-2005, 02:02 PM
[No subject] - by Danklas - 12-31-2005, 02:32 PM
[No subject] - by nirmalan - 12-31-2005, 03:53 PM
[No subject] - by kirubans - 12-31-2005, 06:52 PM
[No subject] - by kurukaalapoovan - 12-31-2005, 07:00 PM
[No subject] - by Sukumaran - 12-31-2005, 10:09 PM
[No subject] - by Thala - 12-31-2005, 11:48 PM
[No subject] - by Sukumaran - 01-01-2006, 12:22 AM
[No subject] - by Thala - 01-01-2006, 12:41 AM
[No subject] - by ஆறுமுகம் - 01-01-2006, 12:47 AM
[No subject] - by Sukumaran - 01-01-2006, 01:21 AM
[No subject] - by Thala - 01-01-2006, 01:29 AM
[No subject] - by Sukumaran - 01-01-2006, 01:59 AM
[No subject] - by தூயவன் - 01-01-2006, 04:45 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)