12-31-2005, 11:22 AM
Vasampu Wrote:இங்கே இளைஞர் என்ற சொல் பற்றிய சிறு விளக்கத்தை நான் தரலாம் என எண்ணுகின்றேன்.
பொதுவாகவே இளைஞர் எனும்போது அது வயது வந்தவர்களையே குறிக்கின்றது. அதாவது 16-18 வயதிற்கு மேற்பட்டோரையே குறிக்கின்றது. அதனால் அதற்கு கீழுள்ளவர்களை (சிறுவர்) அது உள்ளடக்காமல் போய்விடுகின்றது. அதனால் இளையோர் என்ற சொல்லைப் பாவிப்பதே சிறந்தது. அது போல் இளைஞர் என்பது ஆண்பாலுமல்ல பெண்பாலுமல்ல. அது இரண்டிற்கும் பொதுவான பொதுப்பால்.
<b>சில உதாரணம்:</b>
இளைஞன் - ஆண்பால்
இளைஞி - பெண்பால்
இளைஞர் - பொதுப்பால்
ஆசிரியன் - ஆசிரியை - ஆசிரியர்
தலைவன் - தலைவி - தலைவர்
அவன் - அவள் - அவர்
சிறுவன் - சிறுமி - சிறுவர்
ஆனால் நாம் ஆசிரியர் தலைவர் போன்ற சொற்கள் ஆண்பாலென தவறாகவே கருதி வருகின்றோம்.
செல்வமுத்து அண்ணா ஓரளவு மனம் தேறி வரும்வரை பட்டிமன்றம் தொடரட்டும். அதுவரை தமிழினியின் பணியும் தொடரட்டும். பின்பு இருவரும் சேர்ந்து அலசித் துவைத்து திர்ப்பை வழங்கட்டும்.
varnan Wrote:இளைஞர் என்பது ஆணும் அல்ல பெண்ணும் அல்லவா? அப்போ ஏன் யுவதி என்ற சொல் தேவை இல்லாமல் பாவிக்கிறோம்? இளையோர் என்பதுதான் பொதுபால் என்று நினைக்கிறேன்! வசம்பு அவர்களே.
அத்துடன் இளைஞி என்று ஒரு சொல் வளக்கில் இருக்கா???இளம் பெண் என்றுதான் இருக்குமோ?
அதை விட உங்கள் வரிசையில் சொன்ன தலைவன் - தலைவி -தலைவர் என்று முடியாது -தலைமை என்று முடியும் என்று நினைகிறேன்!
அதே போல அவன் - அவள் - அவர் என்று முடியாது அவர்கள் என்று முடியும் என்றும் கருதுகிறேன் சரியோ தவறோ தெரியவில்லை!
வசம்பு - உங்கள் வழியிலேயே சிறுவன் என்பதன் பன்மை என்ன..???! சிறுமி என்பதன் பன்மை என்ன..??! ஆசிரியன் என்பதன் பன்மை என்ன..??! இளைஞன் என்பதன் பன்மை என்ன..??! தலைவன் என்பதன் பன்மை என்ன..??! தலைவி என்பதன் பன்மை என்ன..??!
காளை - காளையர் இவை இரண்டும் ஆண்பால் சொற்கள்.!
கன்னி - கன்னியர் இவை இரண்டும் பெண்பால் சொற்கள்..!
இளைஞன் - இளைஞர்கள் ( இது ஆண்பால் சார்ந்த ஒருமை பன்மை - காரணம் இளைஞன் - இளைஞன்கள் ( என்று புணரிலக்கணம் வர இடமளிக்காது..அதுவே திரிபுற்று இளைஞர்கள் என்றாகிறது - இதற்கு வேறு ஆண் - பெண் சம உரிமை மொழிக்குள்ளும் புகுந்து விளையாட புதிய விளக்கங்களோடு.. இளைஞர்கள் என்பதில் பெண்களும் உள்ளடக்கப்படுவதாக சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் அர் ஆர் கள் விகுதிகள் எல்லோருக்கும் பொது என்றும். அன் ஆன் ஆண்களுக்கும் அள் ஆள் அட்டி ஆத்தி இ ஐ இவையெல்லாம் பெண்களைக் குறிக்கும் என்றும் பெண் மேலான்மையை மொழிக்குள் திணிக்கிறார்கள்..அதை இலக்கண விதியோடு செய்தார்கள் என்றால் சுபம்.
ம்ம்ம் ஆண் - பெண் சமூகநிலை சமத்துவம் என்பது எவ்வாறெல்லாம் தவறாக உணரப்பட முடியுமோ அவ்வாறெல்லாம் நன்கே உணரப்படுகிறது. மொழியிலும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. என்ன இவர்கள் தந்த மாற்றங்களை மொழி உள்வாங்கிக் கொள்கிறதா என்பதுதான் வினாக்குறி...! காரணம் விதிக்குள் அடங்காத எதுவும் கண்மூடி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் நியாயம் இருக்க முடியாது.)
நன்றி வருணன். நாங்களும் சமீப காலம் வரை தமிழ் இலக்கணத்தில் இலக்கண விதியோடு இளைஞி என்ற சொல்லைப் படிக்கவே இல்லை..! புதிசு புதிசா இலக்கண வரம்பு மீறி வரும் சொற்கள் அவை..! குறிப்பா ஆண் - பெண் சமத்துவம் என்பது மொழிப் பயன்பாட்டிலும் நடைமுறை விதிமுறைக்கு அப்பால் திணிக்கப்பட இவை சிலரால் உச்சரிக்கப்படுகின்றன..! அல்லது உண்மையாகவே ஆண் மேலாதிக்கம் மொழிப் பயன்பாட்டிலும் ஆதிக்கம் செய்ததால்... அப்படியாகி இருக்குமோ தெரியாது. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (மேலுள்ள சில கருத்துக்கள் சமூகத்தில் உள்ள சில பெண்ணிலைவாதிகளால் முன்வைக்கப்பட்ட அல்லது அவர்கள் சார்ந்தோரால் முன்வைக்கப்பட்ட கட்டுரை ஒன்றில் இருந்து பெறப்பட்டுள்ளது. குறித்த கட்டுரையாளரிடம் நிறையவே தமிழ் புணரியல் தொடர்பில் கேட்க வினாக்கள் இருந்தும் அவர் எந்த மூலைக்குள் பதுங்கி இருந்து இதை எழுதி இணையத்தில் வெற்றிகரமாக பிரசுரித்த திருப்தியில் இருக்கிறாரோ தெரியாது. இணையத்தில் வரும் பல விடயங்கள் சுய விருப்பு வெறுப்பின் பேரில் வெளியாகும் ஆக்கங்களே. அவற்றிற்கு சமூக அல்லது கல்வியியல் தரத் தகமை என்பது யாராலும் உறுதிப்படுத்தப்படுவதாக நமக்குத் தெரியவில்லை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

