12-31-2005, 01:30 AM
ஆனால் இந்திராகாந்தி அம்மையார் முழுக்க முழுக்க இந்திய நலன் சார்ந்துதான் இயக்கங்களுக்கு உதவினார் என்பதை ஏற்றுக் கொள்வது கடினம். காரணம் இலங்கைப் பிரைச்சினை சம்பந்தமாக முதன்முதலில் புதுதில்லியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தவதற்கு முன்னர் அமிர்தலிங்கம் போன்றவர்களுடன் இலங்கைத் தமிழரின் சரியான வரலாறுகளை கேட்டறிந்தார். பின் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சில பொய்யான தகவல்களை இந்திராகாந்தி அம்மையாருக்கு சொல்ல முற்பட்டபோது அது தவறான தகவல்கள் என்று சுட்டிக்காட்டியது மட்டுமன்றி சரியான தகவல்களையும் சொல்லி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் வாயை அடைத்தாரென்றும் முன்பு சில பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். அதே போல் இந்திராகாந்தி அம்மையார் உயிரோடு இருந்தவரை இலங்கைத் தமிழர் பிரைச்சினையில் இதய சுத்தியோடுதான் செயற்பட்டார். அது போல அப்போது சென்னையிலும் வேறு இடங்களிலும் இருந்த பல இயக்கங்கள் தமக்குள்ளேயே பிரைச்சினைகள் உருவாகி துப்பாக்கி வேட்டுக்களால் தாக்கி அங்கிருந்த மக்களுக்கு பல இன்னல்களை ஏற்படுத்திய போது கூட மத்திய அரசோ மாநில அரசோ நினைத்திருந்தால் பிரைச்சினைப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உள்ளே தள்ளியிருக்கலாம். ஆனால் இவ்விடயத்தில் இந்தியா மென்மையான போக்கையே கடைப்பிடித்தது. அது மட்டுமின்றி காஷ்மீர் தீவரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுகின்றது என்று குற்றஞ் சாட்டியபடியே மறுபுறத்தில் இயக்கங்களுக்கு தாராளமாக உதவிவந்தது. இதை பலமுறை இலங்கை அரசு சுட்டிக் காட்டியபோதும் இந்தியா மறுத்தே வந்தது. ஆனால் இந்திராகாந்தி அம்மையாரின் மறைவுக்கு பின்னர் வந்த ராஜிவ்காந்தி தவறான வழிநடத்தல்களால் இந்திராகாந்தி அம்மையாரின் காலத்தில் இலங்கைப் பிரைச்சினைகளை சரியாக உள்வாங்கி செயற்பட்டு வந்த பலரை(பார்த்தசாரதி போன்ற) மாற்றியமைத்தார். இதன் பின்னாலேயே நிலைமைகள் தலைகீழாகின. இந்திய புலநாய்வுத்துறையின் தவறான தகவல்களை வைத்தே பின்னாளில் ராஜிவ்காந்தி நடவடிக்கைகள் எடுத்தார். அது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையினயே வெளிக்காட்டியது.

