Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கமலின் விருமாண்டி...
#8
அதிமுக எம்.பியின் மனைவி, மகள்கள் அட்டகாசம்: துணை நடிகர் மீது தாக்குதல்!

சென்னை:

<img src='http://thatstamil.com/images16/cinema1-275.jpg' border='0' alt='user posted image'>
கலாட்டா நடந்த தலித் எழில்மலை வீட்டின் முன் கூடிய கூட்டம்
---------
துணை நடிகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக எம்.பி. தலித் எழில்மலையின் மனைவி, மகள் உள்ளிட்ட 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஒரு காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியப் பிரமுகராக இருந்தவர் தலித் எழில்மலை. பின்னர் அதிமுகவுக்குத் தாவி திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பியானார்.

இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ளது.

இந்த வீட்டுக்கு அருகே உள்ள ஒரு பங்களாவில் சத்யராஜ், நெப்போலியன் உள்ளிட்டோர் நடிக்கும் அடிதடி என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹாடோஸ் சாலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் வீரமணி என்ற துணை நடிகர். தலித் எழில்மலையின் வீட்டின் அருகே வந்தபோது, செல்போன் ஒலிக்கவே வண்டியை நிறுத்திப் பேசினார்.

அப்போது தலித் எழில்மலையின் மனைவி ரத்னம்மாள், வாசலில் நின்று போன் எல்லாம் பேசக் கூடாது என்று வீரமணியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் நான் வாசலில் நிற்கவில்லை. ரோட்டில் நின்று தான் பேசுகிறேன் என்று பதில் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரத்னம்மாள் கேட்டைத் திறந்து கொண்டு வேகமாக வந்து வீரமணியைப் பார்த்து அடிப்பது போல படு ஆவேசமாக பேசினார். உடனே அவரது மகள் எழில் காத்தரினும் தாயாருடன் சேர்ந்து கொண்டு வீரமணியை வாடா, போடா என்று ஒருமையில் விளித்து மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அவரது வீட்டில் இருந்த மேலும் சில பெண்களும் அங்கு வந்து வீரமணியை தாக்க ஆரம்பித்தனர்.

பின்னர் வீரமணியின் மோட்டார் சைக்கிளை தங்களது வீட்டுக்குள் கொண்டு சென்ற அந்தப் பெண்கள், அவர் அணிந்திருந்த பிரேஸ்லெட், தங்கச் சங்கிலி ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர்.

வீரமணி தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த மற்ற துணை நடிகர்கள் வீரமணிக்கு ஆதரவாக திரண்டனர். அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் வீரமணிக்கு ஆதரவாக அங்கு கூடினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தலித் எழில்மலையின் வீட்டுக்குள்ளிருந்த சில பெண்கள் துப்பாக்கியை எடுத்துக் காட்டி சுட்டு விடுவதாக கூட்டத்தினரை மிரட்டினர்.

இந் நிலையில் படப்பிடிப்பில் இருந்த நடிகர்கள் சத்யராஜ், நெப்போலியன் ஆகியோர் அங்கு விரைந்து தலித் எழில்மலையின் குடும்பத்தினரையும், துணை நடிகர்களையும் சமாதானப்படுத்தினர்.

ஆனால், அப்போது அங்கு வந்த எழில்மலையின் இன்னொரு மகளான வழக்கறிஞர் எழில் கரோலின், இதில் நீங்கள் தலையிடக் கூடாது என்று கூறி சத்யராஜ், நெப்போலியனைத் திட்டினார். மேலும் அவர்களையும் ஒருமையில் பேசினார்.

இதையடுத்து நெப்போலியன் அங்கு தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் துணை நடிகர்களும், பொது மக்களும் தெருவில் அமர்ந்தனர்.

இந்தச் சம்பவத்தால் ஹாடோஸ் சாலை பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.

தாக்கப்பட்ட துணை நடிகர் வீரமணியும் அதிமுகவைச் சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வாழ்க்கையிலேயே பெண்கள் கூட இவ்வளவு ஆபாசமாக பேசுவார்கள் என்பதை இப்போதுதான் பார்க்கிறேன். இதுபோன்ற பெண்களை நான் பார்த்ததே இல்லை என்றார்.

சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து தலித் எழில்மலையின் மகள்கள் மற்றும் அவரது மனைவியை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

வீரமணி மீது தாக்குதல் நடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாசமாகப் பேசி பொருட்களை பறித்தது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் தலித் எழில்மலையின் மனைவி ரத்னம்மாள், மகள் எழில் கரோலினா உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல வீரமணி மீது அத்துமீறி நுழைந்தது, சட்டவிரோதமாக கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

------------
thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by yarl - 12-10-2003, 08:31 PM
[No subject] - by anpagam - 12-11-2003, 12:17 AM
[No subject] - by vasisutha - 12-11-2003, 03:54 AM
[No subject] - by mohamed - 12-11-2003, 03:39 PM
[No subject] - by yarl - 12-14-2003, 09:33 PM
[No subject] - by kuruvikal - 12-14-2003, 11:59 PM
சினிமா-அரசியல்-நிஜம்..! - by kuruvikal - 12-19-2003, 04:33 PM
[No subject] - by kuruvikal - 01-17-2004, 11:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)