12-30-2005, 10:19 PM
இளைஞன் Wrote:வணக்கம் குறுக்காலபோவான்...
இது தான் பட்டிமன்றம். உங்கள் வாதங்கள் எல்லாம் நன்மையடைகிறார்கள் என்கிற அணிசார்ந்ததாகவே இருக்கின்றன. எனவே நன்மையடைகிறார்கள் என்கிற அணியில் சேர்ந்து உங்கள் கருத்தாடலைத் தொடரலாமே.
மற்றது இரசிகைக்கு...
நாம் சிறு பிழை ஒன்று விட்டுள்ளோம் எனன்று நினைக்கிறேன். புலம் என்பது தாயகத்தையே குறிக்கும். புலம்வாழ் இளைஞர்கள் என்பது எம்மைக் குறிக்காது. ஈழத்தில் வாழ்பவர்களையே குறிக்கும். <b>புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்கள்</b> என்பது தான் எம்மைக் குறிக்கும். முடிந்தால் தலைப்பில் இதை மாற்றவும். அதேபோல் புலம்வாழ், அல்லது புலத்து இளைஞர்கள் என்று தமது கருத்தாடலில் எழுதியவர்கள் அவற்றையும் திருத்த முயலுங்கள்.
இனி வருபவவர்கள் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்கள் அல்லது புகலிடத்தில் வாழ் இளைஞர்கள் என்றே எழுதுங்கள்.
நன்றி
இதிலும் ஒரு தவறு இருக்கிறது ரசிகை. புலம்பெயர்ந்து வாழ் இளைஞர்கள் மட்டுமல்ல யுவதிகளும் இணையம் பாவிக்கினம். எனவே புலம் பெயர்ந்து வாழும் இளையோர் என்பதே சாலப் பொருத்தமாக இருக்கும்.
புலம் - இடம்/ தேசம்
புலம் - மண்டலம் (காந்தப் புலம் - magnatic field)
இதைவிட புலத்துக்கு வேறு பொருள் இருந்தாலும் அறியத்தாருங்கள். சில ஊடகங்களிலும் புலத்தமிழர்கள் என்று புலம்பெயர் தமிழர்களை குறிப்பிடினம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

