Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெடுமாறன், சுப.வீ உள்ளிட்டோர் பிணையில் விடுதலை
#9
உண்மையான நீதிக்கு முன் தலைகுனியும் ஜெயலலிதாவின் ஆட்சி...!
------------------------------------

நெடுமாறன் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

டெல்லி:

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தததோடு, தமிழக அரசுக்கு கடும் கண்டணத்தையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நெடுமாறன் உள்ளிட்ட தமிழர் தேசிய இயக்கத்தினர் நான்கு பேருக்கு பொடா வழக்கில் ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், நெடுமாறன் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்குத் தனது ஆதரவைத் தொடர்ந்து அளித்து வருபவர். அவரை ஜாமீனில் விடுவித்தால், சாட்சியங்களைக் கலைக்க அவர் முயலக்கூடும். எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திர பாபு, நீதிபதி லட்சுமணன், நீதிபதி மாத்தூர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதோடு தங்களது கடுமையான கண்டனத்தையும் தமிழக அரசுக்குத தெரிவித்தனர்.

அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:

இந்த வழக்குத் தொடர்பான விபரங்களை நாங்கள் ஆராய்ந்தோம். பொடா வழக்குக்கு எதிராக வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பாக நாங்கள் வழங்கிய தீர்ப்பை ஆதரமாகக் கொண்டே, சென்னை உயர் நீதிமன்றம் இந்த ஜாமீனை வழங்கியுள்ளது.

எனவே, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நாங்கள் தøலையிட வேண்டியதே இல்லை. ஒவவொரு வழக்கிலும் தமிழக அரசு இப்படித்தான் மேல்முறையீடு செய்கிறது.

ஜனநாயக நாட்டில் அரசியல்வாதியாக உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக் கொள்கை இருக்கலாம். அந்த உரிமையை மறுக்க முயல்கிறதா தமிழக அரசு?

தேவையில்லாமல் இந்த விஷயத்தை தமிழக அரசு ஊதிப் பெரிதாக்குகிறது. நெடுமாறனுக்கு ஜாமீன் தரப்பட்டால் என்ன ஆகப் போகிறது?. ஏதோ பெரிய பீதியை உருவாக்க தமிழக அரசு முயல்வது சரியல்ல.

தமிழகத்தில் பொடா சட்டம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் நெடுமாறன் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளது. அந்தக் குற்றச்சாட்டு குறித்தும் நாங்கள் விசாரணை நடத்துவோம் என்றனர் நீதிபதிகள்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் ஜாமீனை மறுக்கப் போய் உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளது தமிழக அரசு.
-----------
Thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kayanmathi - 12-18-2003, 09:00 AM
[No subject] - by Mathivathanan - 12-18-2003, 09:36 AM
[No subject] - by kayanmathi - 12-18-2003, 11:54 AM
[No subject] - by Mathivathanan - 12-18-2003, 01:40 PM
[No subject] - by kuruvikal - 12-18-2003, 02:26 PM
[No subject] - by Paranee - 12-18-2003, 02:45 PM
[No subject] - by kuruvikal - 12-19-2003, 04:22 PM
[No subject] - by Mathivathanan - 01-07-2004, 12:31 AM
[No subject] - by yarl - 01-07-2004, 07:16 AM
[No subject] - by Paranee - 01-07-2004, 09:18 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)