12-30-2005, 04:49 PM
தூயவன் Wrote:வணக்கம் குறுக்ஸ்
<b>அச்சடிக்கும் இயந்திரமானால் என்ன?, தொலைக்காட்சியானால் என்ன காட்டிய ஆபாசங்கள் எதுவும் தீமைகள் தானே.</b> அத் சீராழிவுக்கு உந்து சத்திக்கு கணினி<b>யும்</b> சேர்ந்திருக்கின்றது.
<b>எனவே புகைப்பட உலகானலும், தொலைக்காட்சியானலும் </b>எதுவும் நல்லது என்று யாரும் கூறவில்லை. அவையும் <b>சீரழிவைத் தான் தந்தன.</b>
புகையிலை, சாராயத்துடன், போதைவஸ்து சேர்ந்தது போல.
மேலும் நீர் கேட்ட எல்லாவற்றுக்கும் விவாதத்தில் பதில் தருவேன்
உதைத் தான் அப்பு நானும் சொல்லுறன். எப்படியான கண்டுபிடிப்புக்கள் முன்னேற்றங்கள் வந்தாலும் அதன் பயன்பாடு சார்ந்த நன்மை தீமை முற்று முழுதாக நுகர்வேரில் தான் தங்கியுள்ளது. அதன் அடிப்படையில் இணைய ஊடகம் ஒரு விதிவிலக்கல்ல பட்டிமன்றம் வைத்து விவாதிக்க. மனிதவரலாற்றில் இணையத்துக்கு முதல் வந்த பல் வேறு பட்ட ஊடக மற்றும் ஏனைய தொடர்பாடல்கள் வழிமுறைகள் எவ்வாறு நல்ல வழிகளிலும் தீயவழிகளிலும் பயன் பட்டதோ அதே போல்தான் இணைய ஊடகத்தின் பயன்பாட்டுச் சிறப்புக்களும் சீரழிவுகளும்.
றுவண்டாவில் வானொலி என்ற ஊடகத்தை கூற்று இனவாதிகள் ரூர்சு இன மக்கள் மீது காடைத்தனத்தை கட்டவிள்த்து விடப்பயன்படுத்தினார்கள். சர்வாதிகாரர்களின் நாடுகளில் வானொலி மாத்திரமல் பத்திரிகை, தொலைக்காட்சி என்று அனைத்து ஊடகங்களும் மக்களை அடக்கி ஆளுவதற்கு ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இந்த ஊடகங்கள் சீரழிவத்தான் தருகின்றது என்று அந்த நாட்டு மக்கள் பட்டி மன்றம் நடத்துறார்களா?
திரைப்படத்தில் பைத்தியமாக இருப்பவர்கள் தொலைக்காட்சியிலும் அதைதான் பார்த்து ரசிக்கிறார்கள், வானொலியிலும் அதைத்தான் கேட்டு லயிக்கிறார்கள், பத்திரைகயிலும் சஞ்சிகைகளிலும் அதற்குரிய பகுதிகளில் தான் கவனம். இணையம் என்று இன்னொரு ஊடகத் தொடர்பாடல் வழி கிடைக்கும் போது இயற்கையாகவே தாம் பைத்தியமாக பலவீனமாக இருக்கும் விடையங்களிற்கு தான் பயன் படுத்துகிறார்கள். இந்த பலவீனம் பைத்தியத்தனம் என்பது புலத்திலுள்ள இளையவர்களுக்கு மாத்திரம் இல்லை.
தொலைக்காட்சியில் பயனுள்ள விடையங்களை பார்த்து பயனடையும்; மனப்பக்குவம் கொண்டவர்கள் அதைத்தான் பத்திரிகை சஞ்சிகைகளிலும் வாசிக்கிறார்கள், வானொலியில் கேக்கிறார்கள், இணையம் என்று புதிய ஊடகத்திலும் தேடுகிறார்கள், விவாதிக்கிறார்கள் பரிமாறிக் கொள்கிறார்கள் தம்மை வளப்படுத்திக் கொள்கிறார்கள்.
-1- இங்கே இணை ஊடகம் என்ற இன்னொரு ஊடகம் என்ன வகையில் விதிவிலக்காக இருக்கிறது?
-2- சமூதாய சமூக வர்க்கங்களில் ஏன் புலம் வாழ் தமிழ் இளைஞரும் யுவதிகளும் விசேடமாக விவாதிக்கப்பட வேண்டியவர்கள் ஆகிறார்கள்?
என்பவற்றை விளக்கினால் நானும் பட்டிமன்றத்தில் இணைந்து கொள்கிறேன். :?

