12-30-2005, 03:10 PM
sOliyAn Wrote:Quote:நான் ஒன்று கூறுவேன் தாயகத்திலிருந்து வந்த இளைஞர்களைவிட இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள் சிலர் தமிழ், நுண்கலைப பரீட்சைகளிலே தமிழிலே எழுதி அதிகப்படியான பெறுபேறுகளைப்பெறுகிறார்கள், வாய்ப்பாட்டிலே அரங்கேற்றம் செய்கிறார்கள், மேடை நிகழ்ச்சிகள் செய்கிறார்கள், எல்லாவற்றையும் நன்றாகவே செய்கிறார்கள். கருத்துக்களங்களில் இருக்கிறார்களோ இல்லையோ இணையத்தளங்களைப் பாவிக்கிறார்கள், பயனடைகிறார்கள் என்றே கூறவேண்டும்<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஒரு இளைஞர் பல தமிழ் பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசை தட்டிச் செல்வார். அபார புத்திசாலியாக இருக்கிறாரே என நினைத்து.. ஒருமுறை அவர் பேச்சுப் போட்டியில் பேசி வெற்றியடைந்த பேச்சை, மறுநாள் சிறிதளவாவது பேசிக்காட்டுமாறு கேட்டேன். அவரோ அலங்க மலங்க முழித்து, எதுவுமே நினைவிலில்லை என்றார். எனக்கு அது பெரிய திகைப்பாக இருந்தது. சிறிது காலத்தால் அந்த பெற்றோருடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்தது.
ஒரு பேச்சுப் போட்டிக்கு தயாராகும்போது.. தயார் அப் பேச்சை வாசிக்க.. அந்த இளைஞன் திருப்பி சொல்லுவார். இப்படியே திரும்ப திரும்ப சில நாட்கள் நடைபெறும். பின்னர், தாயாருக்கு பேச்சு மனனமாகிவிடும். அவர் பேச்சை பாராமலேயே சொல்ல.. மகன் தாயாரைப் பார்த்தவாறே திரும்ப கூறுவார்.. பின்பு.. தாயார் சத்தத்தை படிப்படியாக குறைத்து சொல்ல, மகன் சத்தமாக கூறுவார். ஒருநிலையில்... தாயார் சத்தமில்லாமல் பேச்சுக்கு ஏற்றவாறு வாயசைக்க, மகன் சத்தமாக பேசுவார். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
போட்டி ஆரம்பமாச்சா..?? மண்டபத்திலே பேசுபவர்கள் நிற்கும் இடத்துக்கு நேர் எதிரே தாய் அமர்ந்திருப்பார். பேச வரும் மகன், தாயை பார்ப்பார். தாயின் வாய் சத்தமில்லாமல் அசைந்துகொண்டிருக்கும். அதை சத்தமாக்கி பரிசை தட்டிவிடுவார் மகன்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
ஆக, நடுவர் அவர்களே!! கண்ணால் காண்பதுவும் பொய்.. காதால் கேட்பதும் பொய் என்று தங்களுக்கு நானா கூற முடியும்?!
என்னதான் பேச்சு, நாட்டியம் என பாண்டித்தியம் காட்டினாலும், அவர்களுக்குள் அந்தந்த நாட்டு மொழியாடல்தானே விருப்புடன் வெளிவருகிறது?!
சோழியன்
பட்டி மன்றத்தில உள்ள எமது கட்சினரை திசை திருப்ப
இந்தப் பக்கத்தில் புதுக் கதையெல்லாம் அவிழ்த்து விடுறீங்க......
பார்த்தப்பா...............
அவதானமா இருங்க.
இவர் இப்படித்தான்.......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 