12-19-2003, 12:59 PM
ம் மிகவும் சுவாரஸ்யமான விடயம். அமரிக்க விஞ்hனிகள் இன்னுமொ விடயத்தையும் தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஆனால் ஆய்வு இன்னமும் தொடர்கிறது. இந்த மண்டலத்தில் (கொஸ்மஸ்) 200பில்லியன் கோளமண்டலங்கள்(கலக்ஸி) ஒவ்வொன்றும்200 பில்லியன் நட்சத்திரங்களும் கொண்டுள்ளதாக இதுவரை அறியப்பட்டுள்ளன. ஆனால் இது முழு மண்டலத்தின் (கொஸ்மஸ்) 4 வீதமே. அச்சரியம் தானே, அப்ப மிச்சம் இருப்பது??? புதிய கண்டுபிடிப்பின் படி இந்த மண்டலம் விரிவைடைந்து கொண்டு போவதாகவும் இந்த மண்டலத்தில் 73வீதம் ஒரு அதிசய சக்தியான இருண்ட சக்தி எனப்படும் ஒரு சக்தியால் நிரப்பப்பட்டிருப்பாதாக அமரிக்க விஞ்சான சஞ்சிகை தெரிவித்துள்ளது. இது ஈர்ப்பு சக்திக்கு எதிரான ஒன்று எனவும் இதுவே இந்த மண்டலத்தை பெருப்பித்து வருவதாகவும் அறியப்படுகிறது. மீதி 23வீதத்திலேயே நமது புூலோக மண்டலங்களும் ஏனைய அறியப்பட்ட மண்டலங்களே இதனுள் அடக்கம். இந்த செய்தி இன்றைய பத்திரிகை ஒன்றில் வந்துள்ளது. வாசிக் வாசிக் எனக்கு தலை சுத்துது. பௌதீக விண்ணர்கள் ஆரும் இருந்தால் கொஞ்சம் விழங்கப்படுத்தினால் நல்லது.

