Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிவாஜி - ரஜனி & ஷங்கர்
#2
சந்திரமுகியில் ராஜாதிராஜா படத்தில் வருவதைப் போல இளமையான தோற்றத்துடன் வந்த ரஜினிகாந்த், சிவாஜி படத்தில், இன்னும் இளமையாக, பழைய ஹேர்ஸ்டைலுடன் கலக்கலாக வருகிறார்.
<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/shivaji-banner-500.jpg' border='0' alt='user posted image'>

சிவாஜி படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. மு¬தல் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்திய இயக்குனர் ஷங்கர் தற்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்.
<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/rajini-250.jpg' border='0' alt='user posted image'>

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரஜினி, விவேக் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டன. மிகவம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்தப் படப்பிடிப்பு மெல்ல மெல்ல ரசிகர்களுக்குப் பரவவே ஏராளமானோர் படப்பிடிப்பு நடந்த பகுதியில் குழுமி விட்டனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


முடி கொட்டுவதற்கு முன்பு ரஜினி வைத்திருந்த ஹேர் ஸ்டைலில் புத்தம் புது தோற்றத்துடன், கோட், சூட்டுடன் படு இளமையாக காணப்பட்டார் ரஜினி. ரயில்வே அதிகாரி உடையில் அவர் நடித்தார்.

ரஜினி, விவேக், எம்.எஸ்.பாஸ்கர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை வேக வேகமாக சுட்டுக் கொண்டிருந்தார் ஷங்கர். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. அதன் பின்னர் ரஜினி பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.


ரஜினியைப் பார்க்க கூடியிருந்த ரசிகர்கள், 'தலைவர்' ஒருமுறையாவது தங்களைப் பார்க்க மாட்டாரா என்ற ஆவலுடன் நின்று கொண்டிருந்தனர். ஆனால் அவரோ ஜெட் வேகத்தில் புறப்பட்டுச் சென்று விட்டார். இதனால் ரசிகர்கள் நீண்ட ÷நிரம் காத்திருந்தும் 'தலைவரைப்' பார்க்க ¬டியாத ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரஜினி படப்பிடிப்புக்கு ஸ்பெஷல் அனுமதி வழங்கியது யார் தெரியுமா? மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவாம். அவரிடம் ரஜினி படத்திற்கான ஷýட்டிங்கை நடத்த அனுமதி கோரி ரெக்கமண்டேஷன் செய்தது யார் தெரியுமா? மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு.


பாமகவைச் சேர்ந்த வேலுவிடம், ஷங்கர் தரப்பு அனுமதிக்காக அணுக, சென்னை வந்திருந்த லாலுவிடம் நேரடியாகப் பேசி உடனடியாக அனுமதி வாங்கிக் கொடுத்தாராம் வேலு. அப்ப ரஜினியும், பாமகவும் ராசி ஆயிட்டாங்க...

இரட்டை வேடத்தில் ரஜினி: சிவாஜி படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. அதாவது அப்பா ரஜினி பெரிய ஜமீன்தார். அவரை சிலர் ஏமாற்றி மோசம் செய்து விடுகின்றனர். அவர் மீது வீண் பழி சுமத்தி சிறைக்கு அனுப்பி விடுகின்றனர்.

இதை அறியும் மகன் ரஜினி, வளர்ந்து ஆளாகி தந்தையை மோசம் செய்து அவரது வாழ்வை நாசம் செய்தவர்களை பழிவாங்குகிறார். வித்தியாசமான பல வேடங்களில் வந்து வில்லன்களை அவர் பழி தீர்க்கிறாராம்.

இந்தப் படத்தின் கதையை விட ரஜினி போடப் போகும் வித்தியாசமான கெட்டப்கள் ரசிகர்களை ரொம்பவே கவருமாம். பழைய ரஜினி படங்களில வருவதைப் போல ஹேர் ஸ்டைலுடன் ரஜினி கலக்கப் போகிறாராம்.

2வது கட்டப் படப்பிடிப்பை சென்னையில் முடித்து விட்ட அடுத்த கட்டப் படப்பிடிப்பை மீண்டும் ஹைதராபாத்தில் தொடரவுள்ளார்களாம்.

source : thatstamil.com
URL :http://thatstamil.indiainfo.com/specials/cinema/shooting-spot/rajini4.html
Reply


Messages In This Thread
இரட்டை வேடத்தில் ரஜினி - by rajathiraja - 12-30-2005, 06:02 AM
[No subject] - by Luckyluke - 12-30-2005, 06:30 AM
[No subject] - by rajathiraja - 12-30-2005, 07:05 AM
[No subject] - by Luckyluke - 12-30-2005, 08:20 AM
[No subject] - by Mathan - 12-30-2005, 11:08 AM
[No subject] - by Vasampu - 12-30-2005, 01:58 PM
[No subject] - by கறுணா - 12-30-2005, 08:47 PM
[No subject] - by வினித் - 12-30-2005, 09:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)